வீட்டிற்குள்ளேயே இருங்கள்,ஆரோக்கியமாக இருங்கள் பிரதமர் மோடி மீண்டும் வேண்டுகோள்..!!

By Thiraviaraj RMFirst Published Mar 22, 2020, 9:14 AM IST
Highlights

வீட்டிற்குள்ளேயே இருங்கள் ,ஆரோக்கியமாக இருங்கள் இன்று நாம் எடுக்கும் நடவடிக்கை எதிர்காலத்திற்கு உதவும் என்று ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார் பிரதமர் மோடி.

T.Balamurukan
வீட்டிற்குள்ளேயே இருங்கள் ,ஆரோக்கியமாக இருங்கள் இன்று நாம் எடுக்கும் நடவடிக்கை எதிர்காலத்திற்கு உதவும் என்று ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார் பிரதமர் மோடி.

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் புரட்டி எடுத்து வருகிறது. இந்தியாவிலும் நாளுக்குள் நாள் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரசால் இந்தியாவில் 315- பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்று, மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று  நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதன்படி இன்று காலை 7 மணி முதல்  இரவு 9 மணி வரை மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டிருக்கிறார். 

 நாடு முழுவதும் மக்கள், சுய ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர். நாட்டின் முக்கிய நகரங்களிலும் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.பிரதமர் மோடி இன்று காலை வெளியிட்டுள்ள டுவிட் பதிவில்.., " மக்கள் ஊரடங்கில் அனைவரும் பங்கேற்போம். கொவிட்-19 கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு எதிராகப் போராட மிகப்பெரிய பலத்தை அது கொடுக்கும். தற்போது நாம் எடுக்கும் நடவடிக்கைகள் வரும் காலங்களில் உதவும். வீட்டுக்குள்ளேயே இருங்கள். ஆரோக்கியமாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

click me!