
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை என்ற வதந்தியையடுத்து அன்பழகன், ஆர்காடு வீராசாமி, ஸ்டாலின் உள்ளிட்டோர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும், அப்போது எடுத்த புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
எந்த சூழ்நிலையையும் சமாளிக்க காவலர்கள் தயாராக இருக்க வேண்டும் என டிஜிபி டி.கே. ராஜேந்திரன் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள19 சிறப்பு காவல் படைக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகமே பெரும் பரபரப்பில் காணப்பட்டது.
ஏன் இந்த திடீர் உத்தரவு என பலரும் குழம்பி வந்தனர்.இதையடுத்து திமுக தலைவர் மு. கருணாநிதி குறித்தும் சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை க.அன்பழகன், ஆர்காடு வீராசாமி, ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் அபோஒது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்தார். வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.