கருணாநிதியை சந்தித்தார் அன்பழகன் - வதந்திக்கு முற்றுப்புள்ளி...!

 
Published : Sep 26, 2017, 08:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
கருணாநிதியை சந்தித்தார் அன்பழகன் - வதந்திக்கு முற்றுப்புள்ளி...!

சுருக்கம்

anbalagan meet karunanithi at his home in chennai

சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து க.அன்பழகன் நலம் விசாரித்து வருகிறார். 

தமிழகத்தில் தற்போது பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க காவலர்கள் தயாராக இருக்க வேண்டும் என டிஜிபி டி.கே. ராஜேந்திரன் தெரிவித்திருந்தார். 

தமிழ்நாட்டில் உள்ள19 சிறப்பு காவல் படைக்கும் இந்த உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகமே பெரும் பரபரப்பில் காணப்பட்டது. 

ஏன் இந்த திடீர் உத்தரவு என பலரும் குழம்பி வந்தனர். பொதுவாகவே முக்கிய சமபவங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் தான் இது போன்ற ஒரு  அறிவிப்பு வெளியாகும்.

இதையடுத்து  திமுக தலைவர் மு. கருணாநிதி குறித்தும் சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. கருணாநிதி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், கருணாநிதி உடல் நலத்துடன் உள்ளார் என்றும் அவரின் மகளும், எம்.பி.யுமான கனிமொழி கூறியிருந்தார். 

இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து க.அன்பழகன் நலம் விசாரித்து வருகிறார். 
 

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..