அமமுகவின் தொண்டர்களே எஜமானர்கள்.. என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது.. TTV தினகரன் அதிரடி..!

Published : Mar 04, 2022, 08:23 AM IST
அமமுகவின் தொண்டர்களே எஜமானர்கள்.. என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது.. TTV தினகரன் அதிரடி..!

சுருக்கம்

இன்னொரு கட்சி குறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது என்பதுதான் எனது கருத்து. அதுவும் தேர்தல் தோல்வி நேரம் என்பதால் நான் கருத்து கூற முடியாது. ஆனால், யாராக இருந்தாலும் அவர்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ஒரு மாவட்ட நிர்வாகிகள் மட்டும் சுயபரிசோதனை செய்து முடிவு எடுத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த அதிமுகவினரும் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஓபிஎஸ், அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் தலைமை தாங்கினார். தேர்தல் தோல்வி காரணமாக பிளவே காரணம். சசிகலா, டி.டி.வி.தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று தேனி அதிமுக மாவட்டச் செயலாளர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்;- இன்னொரு கட்சி குறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது என்பதுதான் எனது கருத்து. அதுவும் தேர்தல் தோல்வி நேரம் என்பதால் நான் கருத்து கூற முடியாது. ஆனால், யாராக இருந்தாலும் அவர்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

கட்சியில் சேர்ப்பது தொடர்பாக ஒட்டுமொத்த அதிமுக-வும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த அதிமுகவின் முடிவு வந்த பிறகுதான், எனது முடிவை அமமுக தொண்டர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பேன்.  அமமுகவின் தொண்டர்களே எஜமானர்கள். என்னால் எந்த முடிவும் தன்னிச்சையாக எடுக்க முடியாது. நாங்கள் தவறு செய்யவில்லை. அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவருவதுதான் அமமுகவின் லட்சியம் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!