விரைவில் சட்டசபை தேர்தல்..! அதிரடி மாற்றங்களுக்கு தயாராகும் அமமுக..!

Published : Mar 06, 2020, 04:41 PM ISTUpdated : Mar 06, 2020, 04:45 PM IST
விரைவில் சட்டசபை தேர்தல்..! அதிரடி மாற்றங்களுக்கு தயாராகும் அமமுக..!

சுருக்கம்

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கட்சி பணிகளை மேற்கொள்ள வசதியாக புதிய அலுவகத்திற்கான பணிகள் வேகமாக நடந்து வந்தன. இந்தநிலையில் சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே தற்போது புதிய அலுவலகம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா வருகிற 12ம் தேதி நடைவேற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டன. சசிகலா சிறைக்கு செல்லும் முன்பாக அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக தினகரனை நியமித்திருந்தார். ஆனால் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளில் தினகரன் ஓரங்கட்டப்பட்டு ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் கைகளில் அதிமுக சென்றது. இதனால் அதிமுகவை விரைவில் மீட்போம் என்கிற தீர்மானத்துடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்கிற புதிய அமைப்பை தொடங்கிய தினகரன் அதை நாளடைவில் கட்சியாக பதிவு செய்தார்.

அமமுகவின் தலைமை அலுவகம் சென்னை அசோக் நகரில் இருக்கும் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்தது. மக்களவை தேர்தலுக்கு பிறகு அவர் அதிமுகவில் இணைந்து விடவே, அமமுகவிற்கு வேறு இடத்தில் தலைமை அலுவலகம் தேடப்பட்டு வந்தது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கட்சி பணிகளை மேற்கொள்ள வசதியாக புதிய அலுவகத்திற்கான பணிகள் வேகமாக நடந்து வந்தன. இந்தநிலையில் சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே தற்போது புதிய அலுவலகம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா வருகிற 12ம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா பேரவையில் ஒலித்த தமிழ்..! திருக்குறளை மேற்காட்டிய ஆளுநர் தமிழிசை..!

இதுகுறித்து அக்கட்சி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நல கொள்கைகளை ஏந்தி பிடிக்கும் உன்னத லட்சியத்தோடு இயங்கி வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமைக் கழக புதிய அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் புதிய எழிலோடு உருவாகி இருக்கிறது. அம்மா அவர்களின் நல்லாசியுடன் வருகிற 12.3.2020 வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் இதன் திறப்பு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் தலைமை கழக புதிய அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார்.

அரசுப் பேருந்துகளில் அதிரடி கட்டணக் குறைப்பு..! பொதுமக்கள் பெருமகிழ்ச்சி..!

இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்டம், ஊராட்சி கிளைக் கழகம் மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கோர விபத்து..! தமிழக பக்தர்கள் 10 பேர் பலி..!

PREV
click me!

Recommended Stories

விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!
சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!