தெலுங்கானா பேரவையில் ஒலித்த தமிழ்..! திருக்குறளை மேற்காட்டிய ஆளுநர் தமிழிசை..!

By Manikandan S R SFirst Published Mar 6, 2020, 2:57 PM IST
Highlights

கவர்னர் உரையின் முடிவில் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டி அதற்கு விளக்கமும் தமிழிசை அளித்தார். 'உறு பசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராதியல்வது நாடு' என்கிற குறளை தமிழில் கூறி அதிகமான பசி, ஓயாத நோய், அழிவை உருவாக்கும் பகை ஆகியவை இல்லாமல் இருப்பதே மிகச்சிறந்த நாட்டுக்கு அழகு என்று ஆங்கிலத்தில் குறளின் விளக்கத்தை கூறினார்.

தமிழக பாஜக தலைவராக கடந்த 5 வருடங்களாக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில ஆளுநராக குடியரசு தலைவரால் நியமிக்கபட்டார். இதையடுத்து பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிய அவர் தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டு செயல்பட்டு வருகிறார். அங்கிருக்கும் ஆளுநர் மாளிகையில் தங்கியிருக்கும் அவர் அவ்வப்போது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழகம் வந்து செல்கிறார்.

இந்தநிலையில் இந்த ஆண்டின் தெலுங்கானா சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் இன்று தொடங்கியது. இது மாநில ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்ற பிறகு அவர் பங்கும்கொள்ளும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆகும். இதற்காக பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் தமிழிசையை முதல்வர், சபாநாயகர் மற்றும் அதிகாரிகள் வரவேற்று கூட்ட அரங்கிற்கு அழைத்து சென்றனர். அங்கு தெலுங்கானா சட்டப்பேரவையில் ஒலித்த முதல் தமிழ்க்குரலாக 'வணக்கம்' என தனது பேச்சை தொடங்கினார். தெலுங்கில் 'அந்தரிக்கு நமஸ்காரம்' என தெரிவித்த ஆளுநர் தமிழிசை சுமார் 45 நிமிடங்கள் ஆங்கிலத்தில் தனது உரையை நிகழ்த்தினார்.

அரசுப் பேருந்துகளில் அதிரடி கட்டணக் குறைப்பு..! பொதுமக்கள் பெருமகிழ்ச்சி..!

கவர்னர் உரையின் முடிவில் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டி அதற்கு விளக்கமும் தமிழிசை அளித்தார். 'உறு பசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராதியல்வது நாடு' என்கிற குறளை தமிழில் கூறி அதிகமான பசி, ஓயாத நோய், அழிவை உருவாக்கும் பகை ஆகியவை இல்லாமல் இருப்பதே மிகச்சிறந்த நாட்டுக்கு அழகு என்று ஆங்கிலத்தில் குறளின் விளக்கத்தை கூறினார். அதை முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

click me!