ஒரு தேர்தலில் தோத்துட்டா அழிஞ்சு போயிடுவேனா ? அமமுக படு ஸ்ராங்காகத்தான் இருக்கு ! அதிரடி டிடிவி தினகரன்!

Published : Sep 30, 2019, 09:14 AM IST
ஒரு தேர்தலில் தோத்துட்டா அழிஞ்சு போயிடுவேனா ? அமமுக படு ஸ்ராங்காகத்தான்  இருக்கு ! அதிரடி டிடிவி தினகரன்!

சுருக்கம்

ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றதிற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அழிந்துவிடும் என எண்ண வேண்டாம், இன்னும் பல தேர்தல்களை எதிர்கொள்ளும் பலம் எங்களுக்கு உள்ளது  என டிடிவி தினகரன்  அதிரடியாக தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம், கணியூர் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதே இலக்கு என தெரிவித்தார். நாடாளுமன்ற இடைத்தேர்தல் தோல்வி என்பது நல்ல அனுபவம் எனவும் தேர்தல் தோல்விக்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் எனவும் அவர் கூறினார்.

மேலும், ஒரு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தோற்றதிற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அழிந்துவிடும் என நினைப்பது பகல் கனவு எனவும் இன்னும் ஐந்து தேர்தல்களை சந்திக்கும் வலிமை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

சுயநலத்திற்காக சிலர் கட்சியில் இருந்து வெளியேறுகின்றனர் எனவும் சிலர் கட்சியிலிருந்து வெளியேறியதால் கட்சி பலவீனம் அடைந்து விடவில்லை எனவும் அவர் கூறினார்.

அமமுகவிக்கு  ஆதரவாக மக்கள் உள்ளனர் எனவும் வரும் தேர்தலில் மக்கள் ஆட்சியில் அமர்த்துவார்கள் எனவும் தினகரன் தெரிவித்தார்.

அதற்காக அமமுக-வினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார். தன்னை அரசியலில் அறிமுகப்படுத்தியது மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா என்றார். மேலும், நான் எனது தொண்டர்கள், கடவுளைத் தவிர வேறு யாருக்கும் பயப்பட மாட்டேன் எனவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு