பாஜக எங்க கூட்டணியில்தான் இருக்கு ! வாண்ட்டடா திரும்ப, திரும்ப சொல்லும் இபிஎஸ் ! முறுக்கும் பாஜக !!

By Selvanayagam PFirst Published Sep 30, 2019, 8:54 AM IST
Highlights

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தொடரும் என்றும் அக்கட்சி விரைவில் தனது ஆதரவை அறிவிக்கும் என்றும் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வரும் 21 ஆம்தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது. தேமுதிக, பாமக போன்ற கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் பாஜக தனது ஆதரவை இதுவரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் முதலமைச்சரின்  சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்றபின் செய்தியாள்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தமிழ் பாடம் நீக்கப்பட்டது தொடர்பாக கருத்து ஏதும் சொல்ல முடியாது. 

அதாவது, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பு ஆகும். அதில் தமிழக அரசு தலையிடாது. ஆகவே அரசு தலையிட்டால் வேண்டுமென்றே டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அரசு தலையிடுகிறது என்று சொல்வார்கள். தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே கூட்டணி தொடரும் என்று கட்சி தலைவர்களே தெரிவித்து வருகிறார்கள். 

கூட்டணியை பொறுத்தவரைக்கும் தொடரும் என்று பல பேர் தெரிவித்துவிட்டார்கள். இப்போது பாஜகவுக்கு  மாநில தலைவர் யாரும் இல்லை. இதனால் அவர்களை சந்தித்து பேச வாய்ப்பு இல்லை.

இது இடைத்தேர்தல் தான். இடைத்தேர்தலை பொறுத்தவரைக்கும் அ.தி.மு.க. போட்டியிடும் என்று எல்லா கூட்டணி கட்சிகளுக்கும் எங்களது விருப்பத்தை ஏற்கனவே தெரிவித்து உள்ளோம் என தெரிவித்தார். ஆனால் பாஜக இதுவரை  அதிமுகவுக்கு ஆதரவு உண்டா ? இல்லையா- என்பது குறித்து இது வரை அறிவிக்கவில்லை. நாங்குநேரியில் பாஜக இன்று தனித்து வேட்பு மனு தாக்கல் செய்யப்பபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!