DMK: திராவிட மாடல் போய்.. காட்டுமிராண்டி மாடல் ஆகிவிடும் - எச்சரிக்கும் டிடிவி தினகரன் !!

By Raghupati R  |  First Published Jun 10, 2022, 11:08 AM IST

TTV Dhinakaran : வாக்குறுதி அளித்துவிட்டு பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வர முடியாது என அமைச்சரே தற்போது  கூறியுள்ளார். அதிமுக ஆட்சியின் போது, 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக கூறி ஆட்சியை பிடித்தனர். தற்போது ஆறு லட்சம் கோடியாக கடன் ஆன பின், கடந்த ஆட் சியை காரணம் காட்டுகின்றனர். 


டிடிவி தினகரன் - பேட்டி 

ஈரோடு மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ திமுக மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை உண்மை என்று தான் நினைக்கிறேன். ஊழல் இல்லை என அமைச்சர்கள் தான் திரூபிக்க வேண்டும். எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பது தான் திராவிட மாடல் என்கின்றனர். ஆனால், எல் லாருக்கும் பட்டை நாமம் போடு வது தான் திமுக ஆட்சி.

Tap to resize

Latest Videos

திமுக ஆட்சி சரியில்லை

விவசாயிகள், தொழிலாளர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு எதிர் மறையாக செயல்படுகின்றனர். வாக்குறுதி அளித்துவிட்டு பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வர முடியாது என அமைச்சரே தற்போது  கூறியுள்ளார். அதிமுக ஆட்சியின் போது, 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக கூறி ஆட்சியை பிடித்தனர். தற்போது ஆறு லட்சம் கோடியாக கடன் ஆன பின், கடந்த ஆட் சியை காரணம் காட்டுகின்றனர். பஞ்சு மற்றும் நூல் விலை பிரச்சனைக்கு  மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும். 

திராவிட மாடல் 

திமுக ஆட்சிக்கு வந்தாலே சமூக விரோதிகள், ரவுடிகளுக்கு துளிர் விட்டு போய் விடும். அந்நிலைதான் தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டு உள்ளது. இது நீடித்தால் திராவிட மாடல் போய் காட்டுமிராண்டி மாடலாகி விடும். அதிமுகவினருக்கு மடியில் கனம் உள்ளதால், திமுக ஆட்சியை விமர்சிக்காமல் உள்ளனர். மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளது. எனவே இவ்விஷயத்தில் மத்திய அரசு பாரபட்சமின்றி நடந்து கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்’ என்று டிடிவி  தினகரன் கூறினார்.

இதையும் படிங்க : ”அந்த அரை போதை அரசியல் தலைவருக்கு சொல்கிறேன்..” அண்ணாமலையை மறைமுகமாக கலாய்த்த ஐ.லியோனி!

இதையும் படிங்க : G Square : ஜி ஸ்கொயர் விவகாரத்தில் இதுதான் நடந்தது.. உண்மையை போட்டு உடைத்த அமைச்சர் முத்துசாமி !

click me!