நெருப்போட விளையாடாதீங்க மிஸ்டா விஜயன்!! கேரள முதலமைச்சருக்கு அமித்ஷா மிரட்டல்….

By Selvanayagam PFirst Published Oct 28, 2018, 7:03 AM IST
Highlights

கோயில் வழிபாட்டில் ஆண்-பெண்சமத்துவம் தேவையில்லை எனவும், அவ்வாறு கூறும் கேரள அரசை கவிழ்க்கவேண்டும் எனவும் முழங்கிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மிஸ்டர் பினராயி விஜயன் நெருப்போட விளையாடாதீங்க என எச்சரித்துள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என  கடந்த மாதம் 28-ம்தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டதில் இருந்து எதிர்ப்புத் தெரிவித்து, கேரளாவில் நாள்தோறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடந்து வருகின்றன.

சபரிமலையில் போராட்டம் நடத்திய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 400க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில், கேரள மாநிலம் கண்ணூரில் பாஜக புதிய அலுவலகத்தை திறந்து வைத்த அக்கட்சித் தலைவர் அமித் ஷா பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது கேரள அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துகிறோம் என்ற போர்வையில் சபரிமலை பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கிறது. சபரிமலை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 2000 பேரை கேரள இடதுசாரி அரசு கைது செய்துள்ளது. நெருப்புடன் விளையாடும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என தெரிவித்தார்.

.

சபரிமலை கோயிலையும், இந்து சம்பிரதாயங்களையும் அழிக்கும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. பிற ஐயப்பன் கோயில்களில் பெண்கள்வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை. ஆனால் சபரிமலை என்பது தனியான வழிபாட்டு முறை கொண்ட கோயில். அதன் தனித்துவம், ஐதீகம் காக்கப்பட வேண்டும்.

கோயிலுக்கு எதிராக சதி செய்யும் கேரள அரசு, சபரிமலையில் நெருக்கடி நிலையை தோற்றுவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் இதுவரை அளித்துள்ள பல்வேறு தீர்ப்புகளை இதுவரை அமல்படுத்தாத கேரள இடதுசாரி அரசு சபரிமலை விவகாரத்தில் மட்டும் அவசரப்படுவது ஏன்? சபரிமலை பக்தர்களின் உணர்வுகளை சீர்குலைக்க நினைப்பது எதனால்? என கேள்வி எழுப்பினார். பக்தர்களை மதிக்காத கேரள அரசை கவிழ்க்க வேண்டும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

அமித் ஷா தனது பேச்சை தொடங்கும் முன்பாக ‘சாமி சரணம் ஐயப்பா’ எனக் கூறி பேச்சைத் தொடங்கினார்.

click me!