சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் இல்லை !! நேருக்கு நேர் மோதிப் பார்க்க முடிவு…. டி.டி.வி. அதிரடி!!

By Selvanayagam PFirst Published Oct 28, 2018, 6:03 AM IST
Highlights

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், உச்சசீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்றும், தேர்தல் தள்ளிப் போவதை விரும்பாததால், களத்தில் இறங்கி நேருக்கு நேர் மோதிப் பார்க்கப் போவதாகவும் அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

.டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் எடுத்த முடிவில் தவறில்லை என்று 3வது நீதிபதி சத்திய நாராயணன் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், இதற்கிடையில் இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என்றும் டிடிவி  ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் மதுரையில் தெரிவித்திருந்தார்..

இந்நிலையில் மதுரையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். ஆதரவாளர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேல்முறையீட்டால் தேர்தல் தள்ளிப்போவதை நாங்கள் விரும்பவில்லை என்றும் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தினகரன், தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் தேர்தலையே விரும்புகிறார்கள். தேர்தலை சந்திப்போம் என்று நான் எடுத்த முடிவு சரியானது என அனைவரும் தெரிவித்திருந்தனர். மக்களின் கருத்துக்களை கேட்ட பின்னர், பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் இந்த முடிவினை கூறினர். 90 சதவீதம் தொண்டகள் எங்களுடன் தான் உள்ளனர் என தினகரன் கூறினார்..

கிட்டதட்ட எல்லா தகுதிநீக்க எம்.எல்.ஏக்களுடனும் பேசியாகிவிட்டது. இன்னும் ஒருசிலருடன் பேச வேண்டியுள்ளது. மற்ற தகுதி நீக்க எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்த பிறகு, வரும் அக்டோபர் 31ம் தேதி மதுரை மண்ணில் இருந்து இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அந்தந்த தொகுதிகளில் மக்களின் கருத்துகளை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் கேட்டு வருகிறார்கள் எனவும் அவர் கூறினார்.

.

மேல்முறையீட்டால் தேர்தல் தள்ளிப்போவதை நாங்கள் விரும்பவில்லை என்றும். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் மூலம், இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்க அது உதவும். இந்த கருத்தினைத்தான் சாதாரண மக்களும் தெரிவித்து வருகிறார்கள் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

click me!