இந்தியாவுக்கு 2 கட்சிகள் போதும்... அரசியல் கட்சிகளுக்கு குண்டு போட்ட அமித் ஷா!

By Asianet TamilFirst Published Sep 17, 2019, 9:22 PM IST
Highlights

தற்போது இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா, மேற்கு வங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களில்  உள்ளிட்ட மாநிலங்களில் பிராந்திய கட்சிகள்தான் வலுவாக உள்ளன. குறிப்பாக சில மாநிலங்களில் பாஜக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 

இந்தியாவில் 2 கட்சி ஆட்சி முறையைக் கொண்டு வர வேண்டும் என்று உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 
டெல்லியில் இரு தினங்களுக்கு முன்பு இந்தி தின நிகழ்ச்சியில் பேசிய அமித்‌ஷா, “பன்முகத் தன்மைதான் இந்தியாவின் அடிப்படை. என்றாலும், ஒரே மொழியை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்வது கலாசார ரீதியாக இந்தியாவை ஒன்றிணைக்கும். இந்தியை இந்தியாவின் தேசியமொழியாக அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார். அமித் ஷாவின் இந்தப் பேச்சு சர்ச்சையானது. அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 
இந்தச் சர்ச்சையே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் அடுத்த சர்ச்சைக்குள் அமித் ஷா சென்றுவிட்டார். இந்தியாவில் இரண்டு கட்சிகள் மட்டுமே போதும் என்று அடுத்த குண்டை அமித் ஷா வீசியிருக்கிறது. டெல்லியில் இன்று ஒரு நிகழ்ச்சியில் அமித் ஷா பேசும்போது, “70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறை தோற்றுவிட்டது என்று மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர். மக்கள் அப்படி நினைப்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவிலும் 2 கட்சி ஆட்சி முறையை கொண்டு வரவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
தற்போது இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா, மேற்கு வங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களில்  உள்ளிட்ட மாநிலங்களில் பிராந்திய கட்சிகள்தான் வலுவாக உள்ளன. குறிப்பாக சில மாநிலங்களில் பாஜக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் அமித் ஷா இந்தியாவில் இரு கட்சி ஆட்சி முறை இருக்க வேண்டும் என்று பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையாகி இருக்கிறது.

click me!