பொன்.ஆர் திடீர் பல்டி..!! அரசியல் கட்சிகள் அதிர்ச்சி...!!

By Asianet TamilFirst Published Sep 17, 2019, 8:10 PM IST
Highlights

ஒரு நன்றி சொல்லகூட அவர்கள் யாருக்கும் மனம் இல்லை என்ற ஆதங்கத்தில்தான் அப்படி கூறினேன். 

ஒட்டு மொத்த தமிழர்களையும் நன்றி கெட்டவர்கள் என கூறவில்லை, தமிழை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளையே அப்படி குறிப்பிட்டேன் என்று  முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ரதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரே மொழி ஒரே தேசம் என்ற கோஷத்தை முன்வைத்து நாடு முழுவதும் இந்தியை கட்டாயமாக்கும் முயற்ச்சியில் அமித்ஷா ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடியும் அதே கருத்தை வலியுறுத்தி மேடை தோறும் பேசிவருகிறார். மத்திய அரசின் இக் கருத்துக்கு இந்தி மொழிபேசாதா மாநிலத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது மற்ற மாநில அரசியில் கட்சி தலைவர்களும்  அதை தீவிரமாக  எதிர்த்து வருகின்றனர். இந்திமொழியை வலுகட்டாயமாக திணிப்பதன் மூலம் நாட்டின் ஒருமைபாடு கேள்விகுறியாகும் என்றும். இது மற்ற மாநில மொழிகளை அழிக்கும்  முயற்ச்சி என்றும் கண்டித்து வருகின்றனர். தமிழக மக்களும் இந்தி மொழி கட்டாயம் என்பதை எதிர்த்து வருகின்றனர். இந் நிலையில் இந்தி மொழி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். தமிழர்கள் நன்றி கெட்டவர்கள் எனக்கூறினார். 

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி, திருக்குறலை நாடு முழுவதும் கொண்டு சேர்த்ததுடன்  மற்ற மாநில பாட புத்தகத்திலும் அதை கட்டாய இடம்பெற செய்ததுடன் பல செயல்களின் மூலம் பிரதமர் தமிழுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் சேவையாற்றி உள்ளார். அவர் எங்கு உரை நிகழ்த்தினாலும் திருக்குறலை மேற்கோல் காட்டியும் தமிழிலும் உரையாற்றி வருகிறார் அதற்கு இதுவரை யாரும் ஒரு சிறு நன்றி கூட தெரிவிக்கவில்லை என கடிந்துகொண்டார். அவரின் இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் தன் பேச்சு குறித்து விளக்கும் அளித்துள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன். அவரின் விளக்கும் பின்வருவாறு:- தமிழர்கள் நன்றி கெட்டவர்கள் என நான் கூறியது 8 கோடி தமிழர்களையும் அல்ல. தமிழ் என்ற வார்த்தையை பயன்படுத்தி அரசியல் நடத்துகின்றவர்களைதான் அப்படி கூறினேன். சிலர் தமிழை அரசியிலுக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். அதை வைத்தே பிழைப்பு நடத்துகின்றனர். அவர்களைத்தான் அப்படி கூறினேனே தவிர தமிழக மக்களை அல்ல என்றார். எங்கு சென்றாலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசும் பிரதமருக்கு அதுவரை ஒரு நன்றி சொல்லகூட அவர்கள் யாருக்கும் மனம் இல்லை என்ற ஆதங்கத்தில்தான் அப்படி கூறினேன். தமிழை வைத்து வியாபாரம் செய்பவர்களை தான் அப்படி பேசினேனே தவிற ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரான கருத்து என்று யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என விளக்கம் அளித்தார்.

click me!