அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மெடிக்கல் டெஸ்ட் பண்ணணும்..!! அடித்து தூள் கிளப்பிய அழகிரி..!!

By Asianet TamilFirst Published Sep 17, 2019, 6:41 PM IST
Highlights

ஜெ. இருந்தபோது அமைச்சரகள் யாரும் செய்தியாளர்களிடம் பேசியதே இல்லை,ஆனால் இப்போது பேசுகிறார்களே என்ற கேள்விக்கு?  அப்போது அடிமைகளாக இருந்தார்கள் ! இப்போது கோமாளிகளா மாறிவிட்டார்கள் ! என்றார்
 


சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறப்பு கூட்டத்திற்கு பிறகு அக் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது,

மாகாத்மா காந்தியின் 150 பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட ஆயத்த கூட்டமாக தான் இந்த கூட்டம் நடைபெற்றது.150 அடி உயரத்தில் கொடிமரம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படும் அதேபோல கன்னியாகுமரியில் பாதயாத்திரை நிகழ்வும் நடைபெற உள்ளது. மகாத்மா காந்தியின் தத்துவம் இந்தியாவிற்கும் !  இந்திய பொதுவுடமைக்கும் தேவை ! எதையும் திணிப்பதோ அல்லது வன்முறையோ இந்தியாவை ஒருமைபடுத்தாது என்பதை முன்வைத்து தமிழகம் முழுவதும் கூட்டங்கள் நடைபெறும்.என்றார்.

ஒரே நாடு ! ஒரே மொழி ! எனும் அமித்ஷா பேச்சு தேசத்தை பிரித்துவிடும், தேசத்தை வன்முறை களமாக மாற்றிவிடும். பாகிஸ்தான் ஆட்சியர்களின் மொழி வெறியர்களால் தான் வங்காளதேசம் எனும் ஒரு நாடு தனியாக உருவானது.  அதேபோல தான் இப்போது மொழி வெறியர்கள் செய்கிறார்கள். இந்திய தேசத்தில் பிரிவினையை தூண்டும் வகையில் அமித்ஷா பேசியுள்ளார்.  அமித்ஷா எப்போது தமிழகம் வந்தாலும் காங்கிரஸ் கட்சினரால் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்படும்.வரும் 30ம் தேதி காங்கிரஸ் கட்சி பொதுக்குழு கூட்டம் கோவையில் நடைபெறும், அதில் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள்.

நாட்டில் வரலாறு காணாத பொருளாதார மந்தநிலை உருவாக்கி உள்ளது. இதனை மறைக்கும் விதமாகவே மோடி, அமித்ஷா இருவரும் சேர்ந்து சிதம்பரம்,காங்கிரஸ் கட்சியின் மீது பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர். அவர்களின் திசை திருப்பும் இந்த முயற்சி பலிக்காது என்றார்.பா.சிதம்பரத்தின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்பது காங்கிரஸ் கட்சி மீதான தாக்குதல். ஒரு போதும் சிறையை பார்த்து காங்கிரஸ் கட்சியினர் பயம்கொள்ள மாட்டார்கள் காரணம் எங்களுக்கு பூர்வீகம் என்பது சிறைச்சாலை தான்.அதிமுக இருமொழி கொள்கையில் நிலையாக இருந்தாலும் மத்திய அரசிடம் ஹிந்தி திணிப்பு தொடர்பாக எதிர்த்து பேசுவதரக்கு பலம் இல்லை.

 5,8ம் வகுப்பிற்கு பொதுதேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது, குழந்தைகளின் இடைநிற்றலை தடுக்கவே 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது  5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுதேர்வு என்பது குழந்தைகளின் கல்வியை தடுக்கும் என்றார். உலகத்திலே, இந்தியாவில் மட்டும் தான் ஜாதியை வைத்து கல்வியை பிரிக்கிறார்கள் இது சமூக நீதிக்கு எதிரானது.அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு எனக்கு எவ்வளவு நேரம் ஆகும் ? ஆனால் அது நியாயம் இல்லை. தொலைக்காட்சி விவாதத்தில் அமைச்சர் பேசியபோது அவர் சுயநினைவுவுடன் தான் இருந்தாரா என்று தெரியவில்லை ? அவரை மன நல மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். நாளை இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

உள்ளாட்சி தேர்தல் பணிகள் காங்கிரஸ் கட்சியினர் விரைந்து செய்து வருகின்றனர், ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜெ. இருந்தபோது அமைச்சரகள் யாரும் செய்தியாளர்களிடம் பேசியதே இல்லை,ஆனால் இப்போது பேசுகிறார்களே என்ற கேள்விக்கு?  அப்போது அடிமைகளாக இருந்தார்கள் ! இப்போது கோமாளிகளா மாறிவிட்டார்கள் ! என்றார்
 

click me!