சசிகலா மட்டும் வெளியே வரட்டும் ! அப்புறம் என்ன நடக்குது பாருங்க !! புகழேந்தி அதிரடி பேச்சு !!

Published : Sep 17, 2019, 08:53 PM ISTUpdated : Sep 17, 2019, 08:54 PM IST
சசிகலா மட்டும் வெளியே வரட்டும் ! அப்புறம் என்ன நடக்குது பாருங்க !! புகழேந்தி அதிரடி பேச்சு !!

சுருக்கம்

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அங்கிருந்து வெளியே வந்ததும் அதிமுக – அமமுக இணைந்துவிடும் என்றும், அவரை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஏற்றுக்கொள்வார்கள் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தஞ்சையில் அ.ம.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் பட்டியலில் இருந்து என்னை நீக்கியதாக இதுவரை எனக்கு எந்த தகவலும் வரவில்லை. 

இது சசிகலா எனக்கு கொடுத்த பதவி. இது யாருக்கு வேண்டுமானாலும் செல்லலாம். அதுபற்றி தலைமை தான் முடிவு  செய்யும். அ.ம.மு.க. எனது கட்சி. அந்த கட்சியில் தான் தொடர்ந்து நீடிக்கிறேன். என்னை .யாரும் நீக்க முடியாது என புகழேந்தி குறிப்பிட்டார்.

நான் பாஜகவுக்கு  செல்வதாக கூறுவது தவறான தகவல். சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார். அமைச்சர் ஜெயகுமார் தவிர மற்ற அமைச்சர்கள் யாரும் சசிகலாவை பற்றி தவறாக பேசவில்லை.  சசிகலா வெளியே வந்தால் கட்சிக்கு நல்ல காலம் பிறக்கும். அப்போது ஆட்சியாளர்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள் என அவர் தெரிவித்தார்.


.
இந்தி மொழி ஒரே மொழி என்று குரல் எழுப்புகிறார்கள். இதற்கு ஆட்சியாளர்கள், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். இதில் கட்சி பேதம் பார்க்கக்கூடாது என்றும் புகழேந்தி தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

CM Net Worth: தமிழகம், புதுவை, கேரளா, 5 மாநில முதல்வர்களில் யார் ரிச்?
தேர்தல் களத்தில் களைகட்டும் நம்ம ஊரு கலைகள்... பிரச்சாரத்தை தெறிக்கவிடும் கலைஞர்கள்!