அள்ளிவிட்ட அமித்ஷா... தமிழர்களின் வாக்குகளை வளைக்க திரித்துப் பேசுவதா..?

By Thiraviaraj RMFirst Published Apr 2, 2019, 5:46 PM IST
Highlights

தமிழகத்தில் இருந்து இரு மத்திய அமைச்சர்களை உருவாக்கியுள்ளோம் எனக்கூறி அதிர வைத்திருக்கிறார் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா. 
 

தமிழகத்தில் இருந்து இரு மத்திய அமைச்சர்களை உருவாக்கியுள்ளோம் எனக்கூறி அதிர வைத்திருக்கிறார் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா. 

தூத்துக்குடியில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் பிறந்த தமிழகத்தில் இருந்து பேசுவதில் பெருமிதம் அடைகிறேன். பொன். ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 2 தமிழர்களுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கி கவுரவித்துள்ளோம்’ என அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2014ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வெற்றிபெற்றது. பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் வெற்றி பெற்றார். பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்றார். இந்நிலையில், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்.ராதாகிஷ்ணன் மத்திய அமைச்சரவையில் இருந்து வருகிறார். ஆக மொத்தம் தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சரவையில் ஒருவர் மட்டுமே அங்கம் வகிக்கும் நிலையில் அமித்ஷா நிர்மலா சீத்தாராமனையும் சேர்த்துள்ளார். 

நிர்மலா சீத்தாராமன் பிறந்தது மதுரையாக இருந்தாலும் அவர் படித்தது திருச்சியாக இருந்தாலும் மாஸ்டர் டிகிரியை டெல்லியில் முடித்தார். பின்னர் பின்னர் ஆந்திர பிரடதேசத்தை சேர்ந்த தெலுங்கு பிராமின் வகுப்பை சேர்ந்த பிரகலா பிரபாகரை திருமணம் செய்து கொண்டு ஆந்திராவில் செட்டிலாகி விட்டார்.

 

பாஜகவில் செய்தி தொடர்பாளராக இருந்த அவர் ஆந்திராவில் இருந்து மாநிலங்களை மூலம் 2014ல் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து 2016ல் கட்நாடக மாநிலங்களவை பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு ராணுவ அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில் ஆந்திராவில் செட்டிலாகிவிட்ட, கர்நாடக மாநிலங்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா சீதாராமனையும் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் என அமித் ஷா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

click me!