தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு..? டிடிவி.,யின் திடுக் திட்டம்..!

Published : Apr 02, 2019, 05:45 PM ISTUpdated : Apr 02, 2019, 05:49 PM IST
தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு..? டிடிவி.,யின்  திடுக் திட்டம்..!

சுருக்கம்

காங்கிரஸ் கட்சி உதவியுடன் மாநில  கட்சியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வாய்ப்புள்ளது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.   

காங்கிரஸ் கட்சி உதவியுடன் மாநில் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வாய்ப்புள்ளது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அமுமக மற்றும் எஸ்டிபிஐ கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதனையடுத்து அரசியல் தலைவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், திருப்பூரில் அமமுக வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வத்தை ஆதரித்து டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய தினகரன், காங்கிரஸ் கட்சி உதவியுடன் மாநிலக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வாய்ப்புள்ளது எனக் கூறினார். மேலும், எந்தத் தேசிய கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது; மாநில கட்சிகளே பிரதமரை தேர்ந்தெடுக்கும் என அவர் தெரிவித்தார். 

மேலும் பாஜகவுக்கு ஒரு போதும் ஆதரவு இல்லை என தினகரன் திட்டவட்டமாக கூறிவிட்டார். அப்படியென்றால், மத்தியில் காங்கிரஸ் வெற்றிபெறும் பட்சத்தில் அதற்கு ஆதரவு அளிக்க தினகரன் தயாராக உள்ளதையே அவரது பேச்சு காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

 

தமிழகத்தை அடகு வைக்க எடப்பாடி பழனிசாமி முதல் கையெழுத்து போட்டார் என்றால், அமைச்சர் தங்கமணி இரண்டாவது கையெழுத்து போட்டார். ஓட்டு கேட்க செல்லும் எடப்பாடி பழனிசாமி, பில்கேட்ஸ் போல ஒரு மைக்கை மாட்டிக் கொண்டு பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக போராடிய விவசாயிகள் மீது அடக்குமுறையை கையாளுகிறார் என்று தினகர் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!