அவரு நடந்து வந்தாலே வெற்றி... இப்ப பறந்தே வந்துட்டாரு... கண்டிப்பா ஜெயிச்சுடுவ தமிழிசை ஆரூடம்..!

Published : Apr 02, 2019, 05:06 PM ISTUpdated : Apr 02, 2019, 05:07 PM IST
அவரு நடந்து வந்தாலே வெற்றி... இப்ப பறந்தே வந்துட்டாரு... கண்டிப்பா ஜெயிச்சுடுவ தமிழிசை ஆரூடம்..!

சுருக்கம்

தூத்துக்குடி கடலிலும் தாமரை மலரும், எந்த தியாகம் செய்தாவது வெற்றி பெறுவோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

தூத்துக்குடி கடலிலும் தாமரை மலரும், எந்த தியாகம் செய்தாவது வெற்றி பெறுவோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் தமிழக மற்றும் தேசிய அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 5 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவி வருகிறது.  

இந்நிலையில் தமிழிசையை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தூத்துக்குடியில் சங்கரப்பேரியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது தமிழக பாஜக தலைவரும், தூத்துக்குடி வேட்பாளருமான தமிழிசை பேசுகையில் அமித்ஷா நடந்து வந்தாலே வெற்றியை தருபவர் அமித்ஷா, தற்போது பறந்து வந்துள்ளதால் வெற்றி நிச்சயம். கடலிலும் தாமரை மலரும். எந்த தியாகம் செய்தாவது வெற்றி பெறுவோம் என தமிழிசை கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!
எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!