ஆதார் மற்றும் பாஸ்போர்ட்டை அடமானம் வைத்து 50லட்சம் கடன் கேட்கும் நாமக்கல் தொகுதி வேட்பாளர்...

Published : Apr 02, 2019, 05:45 PM IST
ஆதார் மற்றும் பாஸ்போர்ட்டை அடமானம் வைத்து 50லட்சம் கடன் கேட்கும் நாமக்கல் தொகுதி வேட்பாளர்...

சுருக்கம்

முன்னணி கட்சி வேட்பாளர்களின் கொடோன்களின் சாக்கு மூட்டைகளில் கோடி கோடியாகப் பணம் கொட்டிக்கிடக்கும் நிலையில், தேர்தல் செலவுக்குப் பணம் கேட்டு தனது ஆதார் அட்டையை அடமானம் வைக்க முன் வந்துள்ளார் தமிழக வேட்பாளர் ஒருவர்.

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு அகிம்சா சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் தனது தேர்தல் செலவினத்திற்காக போதிய பணம் இல்லாத நிலையில், தனது ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட்டை அடமானமாக வைத்து கொண்டு 50 லட்சம் கடன் வழங்க கோரி வங்கிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

இதற்காக காந்தி வேடமிட்டு நாமக்கல் பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு வந்த அவர்  தனது ஏழ்மை நிலையை வங்கி மேலாளருக்கு விளக்கி மனுவும் அளித்தார். கடன் பிரிவு மேலாளரிடம் மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ், ”தேர்தல் செலவிற்கான பணம் என்னிடமில்லை. வங்கியில் கடன் வழங்குமாறு கோரியிருக்கிறேன்”என்று கூறினார். மேலும், தனது மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளதாகவும் நம்பிக்கையுடன்  தெரிவித்தார்.

வங்கியின் கடன் பிரிவு மேலாளர் ரமேஷுக்கு 50 லட்சம் கடன் வழங்குவதாகக் கூரியிருப்பது உண்மையா அல்லது வேட்பாளர்களின் தேர்தல் வாக்குறுதி போன்றதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!