அமுல் மூலம் ஆவினை காலி செய்ய அமித் ஷா சதி.. அழிவின் விளிம்பில் அதிமுக.. மாணிக்கம் தாகூர்.!

By vinoth kumar  |  First Published Jun 8, 2023, 6:39 AM IST

பிரதமர் மோடி 9 ஆண்டுகளாக சுற்றாத ஊரே கிடையாது. போகாத நாடே கிடையாது. மோடி வெளிநாடுகளுக்கு சென்று என்ன பெற்று வந்தார் என ஆளுநர் கேட்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது. 


கரைந்து வரும் கப்பலாகவும், உடைந்த மண் பாத்திரமாகவும் உள்ள அதிமுகவின் இறுதி காலம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- குஜராத்தின் அமுல் மூலம் ஆவினை காலி செய்வதற்கும், உண்மையான வேர்களை அறுப்பதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா சதித்திட்டம் தீட்டியுள்ளார். ஆவின் பிரச்னைகளின் பின்னணியில் பாஜவினருக்கு பங்கு இருக்கிறது. ஆவினில் சீர்கேடு நிலவி வருவதற்கு 10 ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுக அரசே காரணம் என குற்றம்சாட்டினார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஒரு வாரம் தான் டைம்..! அதற்குள் ராஜினாமா செய்யனும்.. இல்லைனா போராட்டம் ... எச்சரிக்கும் கே.எஸ் அழகிரி

மேலும், ஆவினை மேம்படுத்த புதிய அமைச்சராக தேர்வு செய்த மனோ தங்கராஜ் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதலீட்டை ஈர்க்க வெளிநாடு சென்று நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொத்தாம் பொதுவாக பேசியுள்ளார். 

இதையும் படிங்க;- உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை அதிகார அத்துமீறல்.. பொங்கி எழும் முத்தரசன்..!

பிரதமர் மோடி 9 ஆண்டுகளாக சுற்றாத ஊரே கிடையாது. போகாத நாடே கிடையாது. மோடி வெளிநாடுகளுக்கு சென்று என்ன பெற்று வந்தார் என ஆளுநர் கேட்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக அழிந்து வருகிறது. கரைந்து வரும் கப்பலாகவும், உடைந்த மண் பாத்திரமாகவும் உள்ள அதிமுகவின் இறுதி காலம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது என மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார். 

இதையும் படிங்க;- பொறுத்தது போதும்.. 2024 தேர்தல் பாஜகவுக்கு பாடமாக இருக்க வேண்டும் - திமுகவினருக்கு உத்தரவு போட்ட ஸ்டாலின்

click me!