முதுமையின் காரணமாக அவர் நம்மை விட்டுப் பிரிந்தார்கள்.பிரிந்தார்கள் என்று சொல்வதை விட - நான் அடிக்கடி சொல்லி வருவதைப் போல - மறைந்திருந்து நம்மை தலைவர் கலைஞர் அவர்கள் கண்காணித்து இருப்பதாக நான் நினைக்கிறேன் என்று பேசினார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "95 வயது வரை வாழ்ந்த தலைவர் கலைஞர் அவர்கள்-இன்றும் கூடுதலாக ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருப்பாரேயானால் - இதோ இந்த மேடையில் நடுநாயகமாக அவர் அமர்ந்திருந்தார். முதுமையின் காரணமாக அவர் உடல் நலிவுற்றார்.
முதுமையின் காரணமாக அவர் நம்மை விட்டுப் பிரிந்தார்கள்.பிரிந்தார்கள் என்று சொல்வதை விட - நான் அடிக்கடி சொல்லி வருவதைப் போல - மறைந்திருந்து நம்மை தலைவர் கலைஞர் அவர்கள் கண்காணித்து இருப்பதாக நான் நினைக்கிறேன். கண்காணித்துக் கொண்டு இருக்கிறார் என்ற எண்ணத்தோடு தான் நான் தினமும் அவர் நினைவுகளாகத் தான் இருக்கிறேன். அந்த நினைவுகளின் காரணமாகத் தான் அடிக்கடி கடற்கரைக்குச் சென்று அவரது நினைவகத்தை வலம் வருகிறேன்.
அந்த வகையில் இந்த மேடையில் தலைவர் கலைஞர் அவர்களும் அமர்ந்திருப்பதாகவே நினைக்கிறேன்.என் உயிரோடு கலந்து இருக்கக் கூடிய முத்தமிழறிஞரின் அன்பு உடன்பிறப்புகளே.. ஜூன் 3ஆம் தேதி ஒடிசா விபத்து காரணமாக நடைபெற இருந்த அத்தனை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது தான் மனிதநேய மாண்புமிகு கலைஞர் விரும்பியிருப்பார்..கலைஞர் புகழை பரப்பவேண்டியது நம் அனைவரின் கடமை. 95 வயது வரை வாழ்ந்த கலைஞர் இன்னும் 5 ஆண்டுகள் இருந்திருந்தால் நம்மோடு நடு நாயகராக அமர்ந்திருப்பார்.
அவர் மறைந்தார் என்பதை விட நம்மோடு இருந்து நம்மை கண்காணிக்கிறார் என்று நினைக்கிறேன். நம்மைப் பொறுத்தவரையில் தந்தை பெரியாரும் - பேரறிஞர் அண்ணாவும் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் - இனமானப் பேராசிரியர் அவர்களும் , உணர்வுகள். உணர்வுகள் என்பவை அவர்களின் மறைவுக்குப் பிறகும் நமக்கு உயிரூட்டிக் கொண்டிருப்பவை ஆகும்.
இதையும் படிங்க..டிடிவி தினகரனுக்காக ஓபிஎஸ் செய்த காரியம்.. இப்படியொரு ஒற்றுமையா.!! கண்ணீர்விட்ட அதிமுக ர.ரக்கள்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே ஏழை, எளிய, பாட்டாளிகள் பயன் பெறும் ஆட்சியாகத் தான் இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது 'முரசொலி' இதழில் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதினார்கள்.... ''ஏழை குலத்தில் உதித்த ஒரு தமிழன் ஏறுகிறான் அரசு! இனி ஏழைக்கு வாழ்வு வந்தது" - என்று கலைஞர் அவர்கள் எழுதினார்கள்! ஏழை குலத்தில் உதித்த ஒரு தமிழன் பேரறிஞர் அண்ணா! ஏழை குலத்தில் உதித்த ஒரு தமிழன் முத்தமிழறிஞர் கலைஞர்! இவர்கள் ஆட்சி ஏழைகள் சிரிக்கும் ஆட்சியாகத் தான் இருந்தது.
இந்த மேடையில் அனைத்து தோழமை இயக்கங்களுக்கும் வழிகாட்டி என்பதால் தான் அனைத்து தலைவர்களும் இங்கே ஒருசேர வந்திருக்கிறீர்கள். தான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் - ஒரு மாநிலத்தின் தலைவர் என்ற எல்லைகளைக் கடந்து உலகத் தலைவராகச் செயல்பட்டவர் தலைவர் கலைஞர் அவர்கள். ஒரு தத்துவத்தின் தலைவராக தலைவர் கலைஞர் அவர்கள் இருந்தார்கள். கடந்த காலப் பெருமிதங்களோடு நிகழ்காலச் செயல்பாடுகளை இணைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். நிகழ்காலச் செயல்பாடுகளோடு எதிர்கால இலக்குகளைத் தீர்மானித்தவர் தலைவர் கலைஞர்” என்று பேசினார்.
இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!