பொறுத்தது போதும்.. 2024 தேர்தல் பாஜகவுக்கு பாடமாக இருக்க வேண்டும் - திமுகவினருக்கு உத்தரவு போட்ட ஸ்டாலின்

By Raghupati R  |  First Published Jun 7, 2023, 10:37 PM IST

தமிழ்நாட்டில் ஜனநாயக ஆட்சி அமைக்க எப்படி கூட்டணி அமைத்தோமோ, அதுபோல் இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படுவதற்கு ஒரு கூட்டணி அமைந்திட வேண்டும் என்று கூறியுள்ளார்  முதல்வர் மு.க.ஸ்டாலின்.


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் மைதானத்தில் இன்று மாலை நடந்தது. இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலின், எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடலின் உள்ளடக்கம், எல்லோருக்கும் எல்லாம் வாய்த்துவிடக்கூடாது என்று நினைப்பவர்கள்தான் திராவிட மாடலை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் கலைஞரின் கொள்கை வாரிசு, எனவே பேரறிஞர் அண்ணா போட்டுத்தந்த பாதையில் கலைஞர் உருவாக்கி கொடுத்திருக்கும் திட்டம் மூலம் தமிழ்நாடு அடைந்த பயனை சொல்லக்கூடிய வாய்ப்பாகத்தான் இந்த நூற்றாண்டு விழாவை பார்க்கிறேன். கன்னியாகுமரி தொடங்கி கும்மிடிப்பூண்டி வரை தலைவர் கலைஞரின் கால் படாத இடமில்லை. ஆகஸ்ட் 7ஆம் நாள் அன்று சென்னை கடற்கரையில் கலைஞர் நினைவகத்தின் திறப்பு விழா காணவிருக்கிறது. ஜனநாயக போர்க்களமான நாடாளுமன்றத் தேர்தல்களம் நமக்காக காத்திருக்கிறது.

Latest Videos

undefined

இதையும் படிங்க..டிடிவி தினகரனுக்காக ஓபிஎஸ் செய்த காரியம்.. இப்படியொரு ஒற்றுமையா.!! கண்ணீர்விட்ட அதிமுக ர.ரக்கள்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என தீர்மானிப்பதை விட யார் ஆட்சி அமைக்க கூடாது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக அமைய வேண்டும்.2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜனநாயக அமைப்பு முறையும் கூட்டாட்சி முறையையும் காப்பாற்றுவதற்காக இந்தியா முழுவதும் உள்ள பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர்ந்திட வேண்டும்.

பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் தொலைபேசியில் ‘வரும் 23ஆம் தேதி பீகாருக்கு வர வேண்டும், அகில இந்திய தலைவர்கள் கூட்டம் நடக்கவிருக்கிறது’ என்று. தமிழ்நாட்டில் ஜனநாயக ஆட்சி அமைக்க எப்படி கூட்டணி அமைத்தோமோ, அதுபோல் இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படுவதற்கு ஒரு கூட்டணி அமைந்திட வேண்டும் என்று இன்றல்ல தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். என்னை சந்திக்கும் அகில இந்திய தலைவர்களிடம் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

மதவாத, பாசிச எதேச்சதிகார பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் அனைத்தும் அகில இந்தியா முழுமைக்கும் ஒன்று சேர வேண்டுமே தவிர தேவையற்ற முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் தந்துவிடக்கூடாது. பிரிவினைகளால் பாஜக வெல்லப்பார்க்கும், சாதியால் மதத்தால் பிரிவினையை விதைக்கும் அந்த கட்சி அரசியல் கட்சி முரண்பாடுகள் மூலம் வெல்லப்பார்க்கும். எத்தகைய பொய்யை சொல்லவும் பாஜகவினர் தயங்கமாட்டார்கள். அவதூறுகளை அள்ளிவீசமும் அதனை பரப்பவும் ஏவலுக்கு கீழ்படியும் கூட்டம் உள்ளது.

அதற்கு தமிழ்நாட்டில் ஆளுநராக உள்ள அவர் செய்யும் சித்து விளையாட்டுகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பொறுத்தது போதும் பொங்கியெழுவோம் என்ற உணர்வோடு உள்ளோம். மக்கள் நம்மோடு உள்ளார்கள். நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.அடுத்தாண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நமக்காக அல்ல; நாட்டிற்காக, ஜனநாயகத்தை காக்க நடக்கும் தேர்தல் என்பதை மனதில் வைத்து இந்த விழாவில் சபதம் எடுப்போம் அதுதான் கலைஞருக்கு செலுத்தக்கூடிய உண்மையான மரியாதையாக இருக்கும் என்று பேசினார்.

இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!

click me!