வானளாவிய  அதிகாரத்தின் கைகளில் இந்தியா  சிக்கித் தவிக்கிறது…....அமர்த்தியா சென் அசத்தல் பதிவு….

 
Published : Jul 13, 2017, 08:58 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
வானளாவிய  அதிகாரத்தின் கைகளில் இந்தியா  சிக்கித் தவிக்கிறது…....அமர்த்தியா சென் அசத்தல் பதிவு….

சுருக்கம்

amarthiya sen press meet about the urgumentative indian documentary film

அளவு கடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு சிக்கியுள்ளது என்றும்  ஆளும் கட்சிக்கு எது சிறந்தது என்று படுகிறதோ அதை நாட்டு மக்கள் மீது திணித்து வருகிறது என்றும் இந்திய பொருளாதார வல்லுநரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியப் பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் பற்றிய ஆவணப்படமான ‛தி ஆர்கியுமண்டேடிவ் இந்தியன்' என்ற ஆவணப்படத்துக்கு தணிக்கை துறை அதிகாரிகள் பயங்கர கெடுபிடிகளை விதித்தனர்.

அந்த ஆவணபடத்தில் இடம்பெற்றுள்ள பசு காவலர்கள் , இந்துத்துவா, குஜராத் போன்ற  வசனங்களை நீக்கினால் மட்டுமே சான்று வழங்க முடியும் என தணிக்கை துறை அதிகாரிகள் தெரிவித்ததால் அந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்திய தணிக்கைத் துறைக்கு  கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமர்த்தியா சென், செய்தியாளர்களிடம் பேசும் போது. தணிக்கைத் துறையினர் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றனர் என குற்றம் சாட்டினார்.

வானளாவிய  அதிகாரத்தின் கைகளில் இந்தியா சிக்கியுள்ளது என்றும்  மத்தியில் ஆளும் பாஜகவிற்கு  எது சிறந்தது என்று படுகிறதோ அதை நாட்டு மக்கள் மீது திணித்து வருகிறது என்றும் அமர்த்தியா சென் குற்றம் சாட்டினார்.

 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!