வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வி அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது.
அண்ணாமலை முதிர்ச்சியற்ற அரசியல் தலைவராக உள்ளார் என்ற எடப்பாடி பழனிசாமி விமர்சனத்துக்கு பாஜக விளையாட்டுப்பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக - பாஜக இடையே மோதல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இதனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வி அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி;- பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டாரா? என்பது தெரியவில்லை. அவர் சொத்து பட்டியலை தான் வெளியிட்டு இருக்கிறார். அதனை செய்திதாள்களில் பார்த்து தெரிந்து கொண்டேன்.
இதையும் படிங்க;- அவர பெரிய ஆள் ஆக்காதீங்க.. அண்ணாமலை பற்றி என்கிட்ட கேட்காதீங்க - கடுப்பான இபிஎஸ்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவரைப் பற்றி பேச வேண்டாம். அண்ணாமலை பேட்டி கொடுத்து பெரிய ஆளாக காட்ட முயற்சி செய்கிறார். நான் 50 வருடமாக அரசியலில் இருக்கிறேன். எனவே கட்சியில் என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்பது எனக்கு தெரியும். தயவுசெய்து அவரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். மீண்டும் ஒருமுறை கேட்கிறேன். அவரைப் பற்றிய கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள். ஒரு முதிர்ந்த அரசியல்வாதியை பற்றி கேள்வி கேளுங்கள். நான் பதில் கூறுகிறேன் இபிஎஸ் காட்டமாக தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க;- நானும் டெல்டாகாரனு சொல்லிக்கிறாங்க, விவசாயிகளுக்கு என்ன செஞ்சாங்க.? முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய அண்ணாமலை
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான அமர் பிரசாத் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரும், பாஜக விளையாட்டுப்பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர் புது இலக்கணம்.
ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர் புது இலக்கணம்.
அடுத்தவர் காலில் விழுந்து, பதவி பெற்று, கொடுத்தவரையே காலை வாரும் கலையை கற்றவர்களுக்கு இந்த புது அரசியல் இலக்கணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை பாவம்…
அடுத்தவர் காலில் விழுந்து, பதவி பெற்று, கொடுத்தவரையே காலை வாரும் கலையை கற்றவர்களுக்கு இந்த புது அரசியல் இலக்கணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை பாவம் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பான பதிவு வைரலாகி அதிமுகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.