அதிமுகவை கழற்றிவிட்டு ரஜினியுடன் கூட்டணியா..? பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published Feb 10, 2020, 5:08 PM IST
Highlights

நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டதில் உள்நோக்கம் இல்லை. வருமானவரி சோதனைக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எதிர்க்கட்சிகளின் கருத்து தவறானது. ரஜினி கட்சி தொடங்கினால் அவருடன் கூட்டணி அமைப்பது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டதில் உள்நோக்கம் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

பிகில் திரைப்படத்தில் சம்பளம் பெற்றது தொடர்பாக நடிகர் விஜய் வீட்டில் 2 நாட்களாக வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டது. இதில், ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும், விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சோதனைக்கு பின்னால் பாஜக உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. இது தொடர்பாக ஹெச்.ராஜா மற்றும் இல.கணேசன் உள்ளிட்டோர் விளக்கம் அளித்திருந்தனர். 

இதையும் படிங்க;-  வேறு ஒரு ஆணுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலி... நேரில் பார்த்த காதலன் எடுத்த விபரீத முடிவு..!

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டதில் உள்நோக்கம் இல்லை. வருமானவரி சோதனைக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எதிர்க்கட்சிகளின் கருத்து தவறானது. ரஜினி கட்சி தொடங்கினால் அவருடன் கூட்டணி அமைப்பது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார். மேலும், டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

click me!