திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு சிக்கல்... ரவுண்டு கட்டும் நீதிமன்றம்..!

By vinoth kumarFirst Published Feb 10, 2020, 4:47 PM IST
Highlights

கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை அதிமுக அரசின் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அண்மையில் திமுகவில் இணைந்த அவர், அரவக்குறிச்சி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இவர் அதிமுகவில் அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, சுமார் 95 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி பிப்ரவரி 14-ம் தேதி மத்திய குற்றப்பரிவு முன்பு ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை அதிமுக அரசின் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அண்மையில் திமுகவில் இணைந்த அவர், அரவக்குறிச்சி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இவர் அதிமுகவில் அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, சுமார் 95 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு உத்தரவிட்டது. இந்நிலையில், கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இரண்டு வீடுகள் மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் வீடு ஆகிய 3 இடங்களில் சென்னை காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், இந்த வழக்கில் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு கடந்த வாரம் இவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஆனால், காவல் துறையினர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். தினமும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் நிபந்தனை விதித்தார். 

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆதிகேசவலு முன்பு தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராகி சில விளக்கங்களை அளித்தார். அதன்படி இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட அதே நாளில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும், இது விசாரணைக்கு எதிரானது என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வருகிற 14-ம் தேதி விசாரணைக்காக செந்தில்பாலாஜி மத்திய குற்றப்பரிவு முன்பு ஆஜராக வேண்டும். மேலும், முன்ஜாமீன் வழங்கிய உத்தரவில் திருத்தம் செய்யும் வரை செந்தில்பாலாஜி பினைத் தொகை செலுத்த அவசியமில்லை என நீதிபதி தெரிவித்தார்.

click me!