
"நடிகர் திலகம் மீது அன்புள்ளவர்கள் எல்லோரும் வருவார்கள்" ...கமல் வருவாரா ?
சென்னை அடையாரில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபம் திறப்பு விழா நாளை மறுதினம் நடைபெற உள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறந்த நாள் என்பதால் அதே நாளில் மணி மண்டபம் திறக்க வேண்டும் என சிவாஜி கணேசனின் குடும்பமும், நடிகர் சங்கங்களும் கோரிக்கை வைத்தன.
இதனை ஏற்ற அரசு அதன்படியே, அக்டோபர் 1 ஆம் தேதி திறப்பு விழாவிற்கு ஓகே சொன்னது.ஆனால் அமைச்சர்கள் தான் மணிமண்டபத்தை திறப்பார்கள் என ஏற்கனவே சொல்லி வந்த நிலையில், துணை முதல்வர் பன்னீர் செல்வம் மணிமண்டபத்தை திறந்து வைப்பார் என முதல்வர் தரப்பிலிருந்து கூறப்பட்டது.
சில முக்கிய வேலை நிமித்தமாக, முதல்வர் வெளியே செல்ல உள்ளதால் துணை முதல்வர் மணி மண்டபத்தை திறப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரபு, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.மேலும் நடிகர் திலகம் மீது அன்பு கொண்டவர்கள் அனைவரும் வருவார்கள் என தெரிவித்து இருந்தார். ஆனால் இந்த விழாவிற்கு கமல் வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் அதிமுக அரசால் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு , தற்போது ஆளும் கட்சியான அதிமுக மற்றும் திமுக வை எதிர்த்து, சில அரசியல் கருத்தை தெரிவித்து வரும் கமல், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த பிள்ளை போன்று கருதப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது .
சிவாஜி குடும்ப நிகழ்ச்சியின் எந்த விழாவாக இருந்தாலும்,கமல்ஹாசன் தான் முதலில் நிற்பவர் என்றே கூறலாம்.