அரைகுறையாக பார்வையிட்ட அமைச்சர்கள் குழு.. இதெல்லாம் ஏற்கதக்கதல்ல.. திமுக அரசை சாடும் டிடிவி.தினகரன்.!

By vinoth kumar  |  First Published Feb 7, 2023, 12:25 PM IST

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இந்த கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர் உள்ளிட்ட வேளாண் பயிர்களை மழை நீர் சூழ்ந்து, சேதம் அடைந்து நாசமாகின.


டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உரிய மதிப்பீடு செய்யாமல் இழப்பீடு தொகையை அறிவித்திருப்பது ஏற்கதக்கதல்ல என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இந்த கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர் உள்ளிட்ட வேளாண் பயிர்களை மழை நீர் சூழ்ந்து, சேதம் அடைந்து நாசமாகின. இதனையடுத்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து முதல்வரிடம் அறிக்கையின் சமர்பித்தனர். 

Latest Videos

இதனையடுத்து, டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால்  சேதமான பயிர்களுக்கு நிவாரணமாக, ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உரிய மதிப்பீடு செய்யாமல் இழப்பீடு தொகையை அறிவித்திருப்பது ஏற்கதக்கதல்ல என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த மூன்று லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்கள் எதிர்பாராமல் பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர் ஒரே நாளில் அரைகுறையாக பார்வையிட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்திருக்கின்றனர். 33 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் சேதத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என திமுக அரசு கூறியுள்ளது.

உரிய மதிப்பீடு செய்யாமல் இழப்பீடு தொகையை அறிவித்திருப்பது ஏற்கதக்கதல்ல. ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனும் விவசாயிகள் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என டிடிவி.தினகரன் பதிவிட்டுள்ளார்.

click me!