ஹெலிக்காப்டருக்கு அனுமதி கேட்டதெல்லாம் வீணாய்ப்போச்சே... சசிகலா வருகையில் ட்விஸ்ட்..!

By Thiraviaraj RMFirst Published Feb 4, 2021, 2:17 PM IST
Highlights

விடுதலையாகி சசிகலா வரும் 7ம் தேதி தமிழகம் வரும் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

விடுதலையாகி சசிகலா வரும் 7ம் தேதி தமிழகம் வரும் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், ‘’புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து, துயரங்களைத் தாங்கி, சோதனை நெருப்பாறுகளைக் கடந்து வரும், தியாகத்தலைவியின் வருகையை திருவிழா கோலம்பூண்டு வரவேற்போம்! ஒரு தாய் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று தீயசக்தி கூட்டத்தைத் தலையெடுக்கவிடாமல் செய்திடுவோம். தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் வருகிற 7 ஆம் தேதிக்கு பதிலாக 8.2.2021 திங்கள்கிழமை அன்று காலை 9 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருகிறார்கள்’’ என அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள், வருகிற 7.2.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்திற்கு வருகிறார்கள். தமிழக எல்லையில் இருந்து சென்னை வருகிற வரை வழி நெடுக அவர்களுக்கு அளிக்கப்படுகிற வரவேற்பை, பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எந்தவித இடையூறும் இன்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என அறிவித்து இருந்தார்.

7ம் தேதி சசிகலாவை வரவேற்க ஹெலிகாப்டரில் பூ தூவ அனுமதி கேட்டிருந்தார் முன்னாள் பெண் எம்.எல்.ஏ ஒருவர். மேலும், சசிகலாவை வரவேற்பது குறித்து பல்வேறு மாவட்டங்களிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அவரது வருகை தேதி மாறியதால் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். 
 

click me!