ஜெயலலிதாவை நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்தோம்; செல்லூர் ராஜு தடாலடி!

 
Published : Sep 26, 2017, 11:05 AM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
ஜெயலலிதாவை நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்தோம்; செல்லூர் ராஜு தடாலடி!

சுருக்கம்

All ministers watched Jayalalitha

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை நாங்கள் பார்க்கவில்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறிய நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜி, மருத்துவமனையில் ஜெயலலிதாவை நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்தோம் என்று கூறியுள்ளார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதாவின் மறைவிற்கு சசிகலா குடும்பத்தினர்தான் காரணம் என குற்றம்சாட்டினார். மேலும் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் சந்தேகம் எழுப்பியதோடு அமைச்சர்களோ கட்சியின் நிர்வாகிகளோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என தெரிவித்தார். சசிகலா மட்டுமே ஜெயலலிதாவை பார்த்ததாகவும் கூறினார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சசிகலா குடும்பத்தினர் சொல்லச் சொல்லியதையே ஊடகங்களிடம் கூறியதாகத் தெரிவித்தார். 
நேற்று வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி பேசும்பொது, அப்போலோ மருத்துவமனையில் நாங்கள் யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்றும் 2 இட்லி சாப்பிட்டாங்கன்னு சொன்னது எல்லாம் பொய் என்று என்றும் கூறினார்.
மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று திண்டுக்கல் சீனிவாசன், கே.சி. வீரமணி கூறியநிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜி, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்தோம் என்று கூறியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..