
எடப்பாடி பழனிச்சாமியை தினகரன் தான் முதல்வராக்கினார் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தீபக் இதனைத் தெரிவித்தார். கூவத்தூரில் சசிகலா தலைமையில் முதல்வரைத் தேர்ந்தெடுக்க நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் செங்கோட்டையன் வேண்டாம்; எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கலாம் என தினகரன் பரிந்துரைத்ததாகவும் அதன்படியே பழனிச்சாமி முதல்வராக்கப்பட்டதாகவும் தீபக் தெரிவித்தார். பழனிச்சாமியை பரிந்துரைக்க அவரது சட்டையைப் பிடித்து தினகரன் இழுத்து வந்ததாகவும் தீபக் தெரிவித்தார்.
தீபக் கூறிய இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.