
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் கமலை கெஜ்ரிவால் சந்தித்த பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்
அப்போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைசந்திப்பதை நான் பெரும்பாக்கியமாக நினைக்கிறேன் என குறிப்பிட்டார்
எங்கள் இருவரின் சந்திப்பு எதற்காக இருக்கும் என, உங்கள் அனைவராலும் யூகிக்க முடியும் என்றும் தன்னுடைய பேச்சை தொடங்கினார் கமல். மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் நிறைய கற்றுகொள்ளும் நிலையில் தான் உள்ளதாகவும் தெரித்தார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும்அவர் பேசிய வார்த்தைகளில், மிக முக்கியமான வார்த்தையாக,அதாவது "ஊழலுக்கு எதிரானவர்கள்யாருமே எனக்கு உறவினர்கள்" என சுட்டிக்காட்டினார் கமல்.
மேலும் அரவிந்த் கெஜ்ரிவால்பேசும் பொது, கமல்ஒரு சிறந்த நடிகர், அவரை நேரில் சந்தித்து பேசியது மிகவும் மகிச்சியான ஒரு விஷியம் என தெரிவித்தார்.
மொத்தத்தில்,அரசியல் பற்றி தீவிர ஆலோசனை செய்தார்கள். ஆனால் என்ன முடிவு எடுத்தார்கள் என்பது தான் சஸ்பென்ஸ் ஆக உள்ளது