கமல்ஹாசன் ட்ரம்பை சந்தித்தாலும் எங்களுக்கு கவலையில்லை... கலாய்க்கும் ஜெயக்குமார்!

First Published Sep 21, 2017, 3:40 PM IST
Highlights
Jayakumar troll Kamalhaasan meet Delhi CM Arvindh Kejriwal


கமல்ஹாசன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சந்தித்தாலும் எங்களுக்கு கவலையில்லை என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  கூறியுள்ளார். 

ஆளும் கட்சிக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிடும் விமர்சனத்திற்கு பதிலளிப்பதில் முதல் ஆளாய் இருந்து வருபவர்  அமைச்சர் ஜெயக்குமார். இன்று கமல் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு குறித்து விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது; நடிகர் கமல்ஹாசனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பது குறித்து என்னிடம் கேட்கிறீர்கள், கமல் ஹாசன் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தாலும் சரி அமெரிக்க அதிபர்  டொனால்டு ட்ரம்ப்பையே சந்தித்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.

மேலும் பேசிய அவர் இதே நாளில் கடந்த ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற கடைசி அரசு விழாவை எங்களால் மறக்க முடியவில்லை. 

ஜெயலலிதாவின் இறப்புக்கு காரணமானவர்கள் விசாரணை ஆணையத்தில் இருந்து தப்பிக்க முடியாது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கங்கையில் குளித்ததால் நதி பாவமடைந்துவிட்டதாக தினகரன் சொல்கிறார் ஆனால் பாவத்தின் மொத்த உருவமே தினகரன் தானே என பதிலளித்தார்.

click me!