
டெல்லி முதக்ல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நடிகர் கமல் ஹாசன் வீட்டிற்கு சென்றுள்ளார்.தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் கமல் ஹாசனும் சில முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
அதாவது இதற்கு முன்னதாக, பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் திருமண நிகழ்ச்சி வரையில் தமிழக அரசியல் நிலவரத்தை தொடர்ந்து எதிர்த்து வந்தார்.
எங்கு சென்றாலும்,அரசியல் கருத்தை கூறி சர்ச்சை கிளப்பி வருபவர் தான் கமல். இந்நலையில் சமீபத்தில் கூட கேரளா சென்ற கமல், முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து பேசினார். அது குறித்து கமல் தெரிவிக்கும் போது, அரசியலுக்கு தேவையான எதாவது ஒரு பாய்ன்ட் கிடைக்குமானு தான் இந்த விசிட் என சற்று கிண்டலாகவும் தெரிவித்தார்.
பின்னர் நடிகர் ரஜினியுடன் கை கோர்த்து அரசியல் நடத்த தயார் என, அவர் ரஜினிக்கு விடுத்த அழைப்பால் மீண்டும் சர்ச்சை யானது . தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நடிகர் கமலை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசி வருகிறார்.
இதற்கு முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் பாடம் என்பது மற்றவர்களை விட சற்று வித்தியாசமானது. அதாவது இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து ஊழல் செய்து வரும் அரசியல் வாதிகளை எதிர்த்து மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் தான் அரவிந்த் கெஜ்ரிவால்,
பின்னர் படிப்படியாக இவருடைய கொள்கைகள் மக்களுக்கு பிடித்து போக மக்களின் பேராதரவுடன் முதல்வராக பொறுப்பெற்றார் .பின்னர், ஒரு கட்டத்தில் அரசியல் அழுத்தம் தாங்க முடியாமல், தன்னுடைய பதவியை பொறுப்பேற்ற வேகத்திலேயே ,ராஜினாமாவும் செய்தார்
பின்னர் மீண்டும் அடுத்த தேர்தலில் வெற்றியும் பெற்றார். இன்று வரை முதல்வர் பதவியை தக்கவைத்து பயணித்து கொண்டிருக்கிறார்
ஆதாலால் தான் என்னமோ, நடிகர் கமல் புதியதாக கட்சி தொடங்க இருப்பதால் அரவிந்த கெஜ்ரிவாலின் ஆலோசனைகள் முக்கியம் என நினைத்தாரோ என்னமோ .. திடீர் சந்திப்பு எல்லாம் நடக்கிறது.
மேலும் ஒட்டு வங்கி, அரசியலில் கால் பதித்தால் எப்படி நிலைநிறுத்திக் கொள்வது ? எது போன்ற சவால்களை சந்திக்க நேரிடும் என பல விஷியங்கள் அறிவதற்காக இந்த சந்திப்பு இருக்குமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது .
பினராயி விஜயன் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். அரவிந்த் கெஜ்ரிவால்,ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர். ஆனால் இவர்கள் இருவரையும் கமல் சந்தித்திருப்பதை வைத்து பார்த்தால் இந்த இரண்டு கட்சிகளின் கருத்துகளும் சிந்தனையும் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கிறது.
இதெல்லாம் சரி, இத்தனை ஆலோசனை செய்த பிறகு கட்சியில் குதிக்கும் கமல், தாக்கு பிடிப்பாரா ? ஏற்கனவே ஆட்டம் கண்டுள்ள அரசுக்கு நெருக்கடி அதிகம் உள்ள சமயத்தில், கோட்டையை நோக்கி செல்லும் வாய்ப்பு இவருக்கு அமையுமா ? அல்லது .....கானல் நீர் போல் மறையுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க முடியும்