உளவுத்துறை போலீஸுக்கு பல்பு கொடுத்த உலகநாயகன்: ஆண்டவரா கொக்கா?!

Asianet News Tamil  
Published : Sep 21, 2017, 03:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
உளவுத்துறை போலீஸுக்கு பல்பு கொடுத்த உலகநாயகன்: ஆண்டவரா கொக்கா?!

சுருக்கம்

Kamal hassan diverted police and intelligence deportment

தமிழக அரசின் அத்தனை கண்களும் ஆழ்வார்பேட்டையை நோக்கியே விழித்துக் கொண்டிருக்கின்றன. அப்படி என்னதான் பேசிக்கொள்கிறார்கள் இருவரும்? என்று...

தமிழக அமைச்சர்களோடு கருத்து மோதலில் ஈடுபட்ட கமல்ஹாசன் அப்படியே ஒதுங்கிவிடுவார் என்றுதான் அ.தி.மு.க. நினைத்தது. ஆனால் சமீபத்தில் ‘தனி கட்சி துவங்கும் யோசனையில் நான் இருப்பதும் உண்மையே!’ என்று சொல்லி எடப்பாடி கோஷ்டிக்கு ஏக எரிச்சலை கிளப்பியிருக்கிறார் கமல். 

கடந்த சில நாட்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயியின் அழைப்பின் பேரில் அவரது வீட்டுக்கு சென்று ஓணம் விருந்தில் கலந்து கொண்டார். விருந்து முடிந்து வெளியே வந்த கமல் ‘ஆம்! முதலவர் பினராயியிடம் அரசியல் குறித்தும் பேசினேன்.’ என்றார்.

முதல்வரும் இதை ஒப்புக் கொண்டார். இந்நிலையில் கடந்த வாரம் கோழிக்கோடில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடந்த கருத்தரங்கில் பினராயியுடன் சிறப்பு பேச்சாளராக கமலும் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டில் இணையப்போவதாக தொடர்ந்து கிளப்பிவிடப்படுவதால் அந்த நிகழ்வில் பங்கேற்பதை தவிர்த்தார் கமல்.

இதன் பிறகுதான் தனிக்கட்சி யோசனை பற்றி வெளிப்படையாக பேசினார். 

இந்நிலையில் இன்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கமல்ஹாசனை அவரது சென்னை இல்லம் தேடி வந்து சந்திக்கிறார். 

கமலின் அரசியல் பிரவேச அறிவிப்புகள் சூடு பறக்கும் நிலையில் இருவரும் அங்கே என்னதான் பேசிக் கொள்கிறார்கள்? என்பதை அறிய எடப்பாடி அண்ட்கோ ஏக ஆர்வத்துடன் இருக்கிறது. உளவுத்துறை போலீஸை முழுமையாக உசுப்பிவிட்டு தகவலை திரட்டப் பார்த்திருக்கிறது. இதை கமல் தரப்பு துல்லியமாக அறிந்து தயார் நிலையில் இருந்தது. 

உ.போ.வும் மூக்கை உள்ளே நுழைத்து விஷயத்தை உறிய முயன்றபோது, கமல் தரப்பு ஆட்கள் ‘அது ஒண்ணுமில்லை! டெல்லியில சினிமா துறையை எப்படி வளர்ச்சியடைய செய்யலாம் அப்படின்னு ஆலோசிக்கிறாங்க.’ என்று சொல்லி பல்பு கொடுத்திருக்கின்றனர். 
உலக நாயகனா கொக்கா?
 

PREV
click me!

Recommended Stories

திமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி.. கனிமக் கொள்ளை.. முதல்வர் ஸ்டாலின் மீது பரபரப்பு புகார்!
அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி சட்டவிரோதம்.. தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்!