கெஜ்ரிவாலை நெகிழ வைத்த தமிழ் மகள் அக்‌ஷரா: ஏசியா நெட் தமிழ் அன்றே சொன்னது அப்படியே பலிக்கிறது!

Asianet News Tamil  
Published : Sep 21, 2017, 02:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
கெஜ்ரிவாலை நெகிழ வைத்த தமிழ் மகள் அக்‌ஷரா: ஏசியா நெட் தமிழ் அன்றே சொன்னது அப்படியே பலிக்கிறது!

சுருக்கம்

AAP chief Aravind kejriwal to meet Kamal haasan today at Alwarpet

ஆம்! ’ஏஸியா நெட் தமிழ்’ அன்றே சொன்னது கமல் விஷயத்தில் அப்படியே பலித்திருக்கிறது பாருங்கள். என்ன விஷயம்? என்று புருவம் உயர்த்துபவர்களுக்கு இதற்கான விடை சில பாராக்கள் தாண்டி தெரிய வரும்.
சரி மேட்டருக்குள் செல்வோம்...

பிணமாய் நடித்தாலும் கூட அதில் தனி ஸ்டைலை உருவாக்கி அப்ளாஸ் அள்ளுபவர் கமல். அப்பேர்ப்பட்டவர் யதார்த்த வாழ்வியலோடு கலந்த அரசியலை சாதாரணமாக கையாள்வாரா?! டெல்லி முதல்வரை வரவேற்பதில் கலக்கியிருக்கிறார் ஆழ்வார்பேட்டை ஆண்டவர். 

தமிழ், தமிழன், தமிழ் பாரம்பரியம், தமிழனின் உரிமை, தமிழனின் நல்வாழ்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித்தான் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்க முயல்கிறார் கமல்.

இந்நிலையில் இன்று தன் இல்லம் தேடி வந்த டெல்லி முதல்வரை தமிழ் பாரம்பரியப்படி வரவேற்று அசர வைத்திருக்கிறார். 

தன் வீடு தேடி வரும் உறவினரை வாசல் வரை சென்று வரவேற்பதுதான் தமிழனின் வழக்கம். ஆனால் கமலோ ஆழ்வார்பேட்டையில் இருந்து சில பல கிலோமீட்டர்கள் தாண்டியிருக்கும் ஏர்போர்ட்டிற்கு தனது இளைய மகள் அக்‌ஷராவையே அனுப்பி கெஜ்ரிவாலை வரவேற்று அழைத்து வந்தது அழகு! தமிழ் மகளாக அக்‌ஷரா வரவேற்றதில் நெகிழ்ந்தேவிட்டார் கெஜ்ரிவால்.

பாந்தமான குர்தாவில் வந்த அக்‌ஷரா முதல்வரின் கையில் பவ்யமாக பூங்கொத்தை கொடுத்து நுனி நாக்கு ஆங்கிலத்தில் நுட்பமாக வரவேற்றதை பிக்பாஸின் ரசிக கோடிகள் தாண்டி இந்த நிகழ்வை கவனித்த அத்தனை பேரும் பூரிக்கிறார்கள். 

வட இந்திய முதல்வரை தமிழ் பாரம்பரியத்துடன் அழகுற அழைத்து சென்று விருந்தோம்பிக் கொண்டிருக்கிறார் உலக நாயகன் அவருக்கு உறுதுணையாக இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும் உடனிருக்கிறார். 

சரி இப்போது நீங்கள் முதல் பாராவில் வாசித்த விஷயத்துக்கு வருவோமா?

கடந்த சில நாட்களுக்கு முன் நம் இணையதளம் ‘கமலின் அரசியல் மூவ்களுக்கு பின்னாலிருந்து பல விஷயங்களில் தரவுகளை திரட்டி உதவுபவர் அவரது இளைய மகள் அக்‌ஷராதான். ஸ்ருதி மாதிரி ஃப்ரீக்கியாக இல்லாமல் அக்‌ஷரா அடர்த்தியான சிந்தனை உடையவர், அவர்தான் அப்பாவுக்கு பின்னாலிருந்து அவரது பொதுவாழ்க்கை என்ட்ரி தொடர்பாக பல விஷயங்களை செய்கிறார்.’ என்று கூறியிருந்தது. 

அது இன்று அட்சரசுத்தமாக பலித்திருக்கிறது! 
சியர்ஸ் டியர் ரீடர்ஸ்!
 

PREV
click me!

Recommended Stories

திமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி.. கனிமக் கொள்ளை.. முதல்வர் ஸ்டாலின் மீது பரபரப்பு புகார்!
அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி சட்டவிரோதம்.. தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்!