முதல்வர் அகிலேஷ் சமாஜ்வாடி கட்சியிலிருந்து  நீக்கம் - முலாயம் சிங் அதிரடி 

First Published Dec 30, 2016, 7:57 PM IST
Highlights
உத்தரப்பிரதேசத்தில் அதிகாரப் போட்டி காரணமாக, ஆளும் கட்சியான சமாஜ்வாதி கட்சி இரண்டாக உடைந்தது. போட்டி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட முதல்வர் அகிலேஷ் யாதவை ஆறு ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்து கட்சித் தலைவர் முலாயம் சிங் நடவடிக்கை எடுத்துள்ளார்.

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. அங்கு மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 325 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாடி கட்சி நேற்று முன் தினம் வெளியிட்டது.

கட்சி தலைவர் முலாயம்சிங் வெளியிட்ட அந்த பட்டியலில், அவருடைய மகனும், முதல்வர் அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்கள் பலருக்கு ‘சீட்’ மறுத்துவிட்டார்.  அதே சமயத்தில், முலாயம் சிங்கின் தம்பி சிவபால் சிங் யாதவ் ஆதரவாளர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிவபால் யாதவ், அகிலேஷ் யாதவ் இடையே கடும் புகைச்சல் இருந்த நிலையில், இந்த முடிவால் அகிலேஷ் தனது கடுமையான அதிருப்தியை தெரிவித்தார். ஆனால், மாற்றம் செய்தால், கட்சி உடைந்துவிடும், குழப்பம் ஏற்படும் எனக் கருதி, வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்ய முடியாது என்று முலாயம் சிங் யாதவ் திட்ட வட்டமாக தெரிவித்துவிட்டார்.

தனது ஆதரவாளர்கள் நெருக்கடியால், முதல்வர் அகிலேஷ் யாதவ் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். தனது தந்தையும், கட்சித் தலைவர் முலாயம் சிங்கை எதிர்க்கும் முடிவுக்கு வந்தார். , தனது ஆதரவு வேட்பாளர்கள் பட்டியலை அகிலேஷ் யாதவ் நேற்று வெளியிட்டு பதிலடி கொடுத்தார். இதனால்,  கட்சியில் தந்தை மகனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வலுத்து கட்சி உடையும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், அகிலேஷ் யாதவ் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து, விளக்கம் அளிக்குமாறு முலயாம் சிங் நோட்டீஸ் அனுப்பினார்.

இதனால், தந்தை முலாயம் சிங்குக்கும், மகன் அகிலேஷ் யாதவுக்கும் இடையே அதிகாரப்போர் உச்சத்தை அடைந்தது.  ஆனால், அதற்கு முறையான விளக்கம் அளிக்காத, முதல்வர் அகிலேஷ் யாதவ், மற்றொரு தம்பியுமான எம்.பி.யுமான ராம்கோபால் யாதவையும் சமாஜ்வாடி கட்சியில் இருந்து 6 அண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்து முலாயம் சிங் யாதவ் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

 
இதனால், சமாஜ்வாதி கட்சி இரண்டாக  உடைவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், அகிலேஷ் யாதவ் தனிக்கட்சி தொடங்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், மாநில முதல்வராக அகிலேஷ் யாதவ் தொடர்ந்து நீடிப்பரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேச தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், தந்தைக்கும், மகனுக்கும் இப்படி அடித்துக் கொள்வது ஆட்சியைப் பிடிக்க பசியோடு காத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிடும்.

பகுஜன்சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, கடந்த சில நாட்களுக்கு முன் பேசுகையில், மாநிலத்தில், சமாஜ்வாதி, கட்சியும், பாரதிய ஜனதாவும் திரைமறைவு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன என்று குற்றம்சாட்டினார். அது உண்மை என்று எண்ணத் தோன்றுகிறது.

 

 

click me!