
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து இன்று சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் ராணுவ கட்டுப்பாட்டுடன் எஃகு கோட்டையாக இருந்த அதிமுக இன்று சீட்டுக்கட்டைப் போல சிதறிக் கிடக்கிறது.
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்பதைப் போல அக்கட்சிக்குள் தற்போது பலரும் தலைவர்களாக அவதாரம் எடுத்து வருகின்றனர்.முதல் அமைச்சர் பதவியை விட்டுத் தரப் போவதில்லை என்று டாப் கியரைத் தட்டி எடப்பாடி தெறிக்க விட பின்னாள் இருக்கையில் அமர்ந்திருக்கும் பன்னீர்செல்வமோ, எப்பாடு பட்டாவது பிரேக்கை அழுத்தி அவரை நிறுத்த பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதன்வெளிப்பாடு தான் கே.பி.முனுசாமியின் அண்மைச் சீற்றங்கள். ரொம்ப விமர்சிக்காதீங்க, கொஞ்சம் விட்டுச் வச்சு பேசுங்க என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டதால் சைலன்ட் மோடுக்கு போயுள்ளார் கே.பி.ஒன்றாக இருந்தால் தான் பலம்.
இரண்டு அணிகளும் தனித்தனியாக சென்றால் ஆட்சிக்கே ஆபத்து என்று டெல்லியில் இருந்து தகவல் பறந்து வர என்ன செய்வது என்று குழம்பிப் போயுள்ளது ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். டீம்…சசிகலா, டிடிவி, பிரச்சனையை முன்வைத்து முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.