
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் நேற்றிரவு ஓம்பகதூர், மற்றும் கிஷன்பகதூர் ஆகிய இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு கார்களில் வந்ததாக் கூறப்படும் மர்ம நபர்கள், காவலாளிகளை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஓம்பகதூர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய கிஷன்பகதூரை மீட்ட சுற்றத்தார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேல் சிகிச்சைக்காக அவர் தற்போது கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதிமுகவுக்குள் கோஷ்டிப் பூசல் வெடித்துள்ள நிலையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்ற இக்கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் வந்ததாகக் கூறப்படும் மர்ம நபர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.