அ.தி.மு.க, பா.ஜ.க இடையேயான இடப்பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை.
கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது அதிமுக - பாஜக கூட்டணி. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3 மேயர் இடங்கள், 20% வார்டுகள் கேட்கிறது பாஜக. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அ.தி.மு.க, பா.ஜ.க இடையேயான இடப்பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை.
கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பதால் , அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாகவும், நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் கூடிய விரைவில் வெளியிடப்படும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது, கூட்டணி இடப் பங்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சதவீத இடங்கள் ஒதுக்குவது மற்றும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பதால் , அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் என கூறப்படும் நிலையில், கூடிய விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்தார். 20 5 இடங்களை கொடுக்க அதிமுக தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.