சசிகலாவை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்கிற ஆதங்கம், அதிருப்தியில் உள்ள அதிமுகவ சேர்ந்த சில தலைவர்களுக்கு உருவாகியிருக்கிறது.
சசிகலாவை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்கிற ஆதங்கம், அதிருப்தியில் உள்ள அதிமுகவ சேர்ந்த சில தலைவர்களுக்கு உருவாகியிருக்கிறது. அதாவது சசிகலாவை தொடர்புகொள்ள நினைக்கிற மற்றவர்களுக்கு நடுவிலேயே இரும்புத்திரை மாதிரி இருப்பது சசிகலாவின் உதவியாளர் கார்த்திக் என்கிறார்கள்
வயதில் மூத்த வரும், முன்னாள் எம்பியுமான ஒருவர் சசிகலாவை சந்திப்பதற்காக நாள் முழுக்க காத்திருந்தும் கூட சசிகலாவை சந்திக்க விடவில்லை இந்த கார்த்திக். பொதுவாக யார் வந்து என்ன தகவல் சொன்னாலும் கூட, அதை ’நான் சொல்லிக் கொள்கிறேன் .நீங்கள் கிளம்புங்கள்’ என அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறார் கார்த்திக். ஆக மொத்தத்தில் அந்த இரும்புத்திரை அகன்றால் மட்டுமே சசிகலாவால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியும் என அவரது ஆதரவாளர்களும் நலன் விரும்பிகளும் ரொம்பவே ஆதங்கப்படுகிறார்கள்.
அதே போல் டி.டி.வி.தினகரனுக்கும் சசிகலாவுக்கும் முட்டல் மோதல் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது அமமுகவினர் அடிக்கும் போஸ்டர்களில் கூட சசிகலாவில் புகைப்படத்தை தவிர்த்து வருகிறனர்,
2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டர்களில் சசிகலா புகைப்படங்கள் இருந்தன. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுரையில் அமமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் சசிகலாவின் புகைப்படம் இடம்பெறவில்லை.
முன்னதாக அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகளை டிடிவி தினகரன் கண்டித்தது. அது போல் சசிகலா ஏற்பாடு செய்திருந்த வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்வுகளுக்கு அமமுக நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என டி.டி.வி.தினகரன் அறிவுறுத்தி இருந்ததாகவும் அதை மீறி கலந்து கொண்ட நடிகையையும் மூத்த நிர்வாகியுமான ஒருவரை டிடிவி தினகரன் கண்டித்ததாகவும் தகவல்கள் எழுந்தது. அது போல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போஸ்டர்களிலும் பிரச்சாரங்களிலும் சசிகலாவை முன்னிறுத்தக் கூடாது என டிடிவி தினகரன் உத்தரவிட்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்றெல்லாம் பலமுறை பகிரங்கமாக அழைப்பு விடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக போட்டியிடுவது என்ற முடிவு எடுத்த நிலையில், சசிகலா அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார்.
சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் அதிமுக தோல்வி அடைந்து திமுக ஆட்சியைப் பிடித்தது. அதன்பிறகும் கட்சியை தன் தலைமையில் ஒருங்கிணைத்து ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்று இன்றுவரை முயற்சி செய்து வருகிறார் சசிகலா.
அதற்காகவே டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்ததாகவும் அமமுக தரப்பில் முணுமுணுப்புகள் கேட்கின்றன. இதனால் சசிகலாவை ஓரம்கட்ட டி.டி.வி.தினகரன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.