டி.டி.வி, சசிகலா மேலுள்ள அதிப்தி தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் செலவு செய்து வெற்றி பெற்று அதன் மூலமாக சம்பாதிக்க இயலுமா?
மதுரையில் தற்போது ஆளும் கட்சி தரப்பில் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதியின், மகள் மேகலா ரேசில் உள்ளார். அதற்கடுத்து முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கத்தின் மருமகள், மூர்த்தி மனைவி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த சின்னம்மாள் களத்தில் உள்ளனர். இவருக்கு அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் ஆதரவு உள்ளது. மற்றொரு அமைச்சரான மூர்த்தியின் ஆதரவாளர் நாராயணபுரம், முன்னாள் கவுன்சிலர் சசிகுமார் மனைவி, ஆனையூர் பகுதி பொம்மை தேவன் மகன் மகள் ரோகிணி போன்ரொரும் முயற்சித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சியான அதிமுகவில் செல்லூர் ராஜுவின் இரண்டாவது மகள், ராஜன் செல்லப்பாவின் மருமகள் வனிதா உள்ளிட்டோரும், பாஜகவில் எம்எல்ஏ தேர்தலில் தோற்ற மாவட்ட அமைப்பாளர் மகாலட்சுமி போன்றோரும் களத்தில் உள்ளனர். இவர் பாஜகவில் மாநில மகளிர் அணி தலைவர். தேசிய மின் தொகுப்பு மைய கழக அலுவல் சாரா இயக்குனர் போன்ற பொறுப்புகளை வகித்து வருகிறார்.
ஆளும் கட்சி பெண்களுக்கான இலவச பஸ் பயணம், பொங்கல் தொகுப்பு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை மக்கள் பெற்றுள்ளார்கள். நல்ல பெயருடன் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற நினைப்பில் திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் கவுன்சிலர் வேட்பாளர் கனவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக வீட்டிற்கும் அதிமுகவில் கவுன்சிலர் வேட்பாளர்களுக்கும் போட்டியிடுவதில் சுணக்கம் காட்டி வருகிறார்கள். டி.டி.வி, சசிகலா மேலுள்ள அதிப்தி தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் செலவு செய்து வெற்றி பெற்று அதன் மூலமாக சம்பாதிக்க இயலுமா? என்ற ஐயப்பாடு உள்ளதால் சம்பாதித்த பணத்தை இழக்கும் மனநிலையில் அறிமுகக் கூட்டத்தில் ஓசை கேட்டது. பல தொகுதிகளில் அமமுக பிரிக்கும் வாக்குகளால் எளிதாக திமுக உள்ளாட்சித் தேர்தலை வெற்றி கொள்ளும் என்பதே தற்போதைய நிலவரம். ஆளும் திமுக மீதி வெற்றி பெறுவது என்பது சிரமம் எனும் நிலையில் வெற்றி பெற்றாலும் தங்கள் தொகுதிக்கு தேவையானவற்றை செய்வதற்கு ஆளும் அரசு உதவுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.
கடந்த திமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் அழகிரியின் கை ஓங்கியிருந்த காலத்தில் தேர்தல் எவ்வாறு நடத்துவது என்பது என்பதை கண்முன்னால் பார்த்தார்கள். தற்போதைய தேர்தலில் அழகிரியின் பங்கு இல்லாத போதிலும் திமுகவினரை மீறி அரசியல் செய்வது சற்று சிரமம் என்பதை ஒத்துக் கொள்கின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தன் மகளான பிரியதர்ஷினி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன் மகள் ரம்யாவை களமிறக்கக் காத்திருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் கோதாவில் இறங்கி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது. அதிமுக ஆட்சியில் இருக்கும்போதே மதுரை மேயர் பதவியை கைப்பற்றியது திமுக. இந்த முறை மதுரையை கைப்பற்ற அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். திமுகவின் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எனக்கு எம்எல்ஏ பதவி கொடுக்கல என் மருமகளுக்கு மேயர் வாய்ப்பு கொடுங்க என்று தலைமைக்கு காவடி எடுத்து வருகிறாராம்.
மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ மனதளவில் தன் மகளுக்கு சீட் வாங்குவதில் உறுதியாக இருக்கிறார் நேருக்கு நேர் இத்தேர்தல் இல்லை. இதனால் சிக்கி சின்னாபின்னமாக வேண்டாம் என பாஜகவிடமே கொடுத்து விடலாம் என்கிற மனநிலையில் எடப்பாடி -ஓபிஎஸ் இருக்கிறார்களாம். அப்படி கூட்டணி அடிப்படையில் பாஜகவுக்கு முயற்சிகளினால் மதுரை மாவட்ட தலைவராக இருக்கும் டாக்டர் சரவணன் மனைவிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.
எது எப்படியோ மீண்டும் மதுரையில் மீனாட்சி ஆட்சி என்பது உறுதியான கையில் செங்கோல் யார் கைக்கு செல்ல போகிறது என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.