அதிமுக சென்டிமெண்டால் அலறும் பாஜக... எடப்பாடியார் முன் போட்டுடைத்த பொன்னார்..!

By Thiraviaraj RMFirst Published Apr 4, 2019, 4:33 PM IST
Highlights

ஜெயலலிதா அலையை மீறி வெற்றி கண்ட பொன்.ராதாகிருஷ்ணன் இப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்தும் வெற்றிபெற திக்குமுக்காடி வருகிறார். 

கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற போதும் அந்த எதிர்ப்பு அலைகளையும் மீறி கன்னியாகுமரியில் பாஜக போட்டியிட்டு வெற்றி பெற்றது பெரும் ஆச்சர்யமாக கருதப்பட்டது. ஜெயலலிதா அலையை மீறி வெற்றி கண்ட பொன்.ராதாகிருஷ்ணன் இப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்தும் வெற்றிபெற திக்குமுக்காடி வருகிறார். 

அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து இதுவரை கன்னியாகுமரியில் வெற்றிபெற்றதே இல்லை என்கிற செண்டிமெண்ட் உண்டு. அது 
இதுவரை நடைபெற்ற மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தேர்தலில் காங்கிரஸ் கட்சியே பெரும்பாலும் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போதைய அந்தத் தொகுதியின் சிட்டிங் எம்பியான பொன் ராதாகிருஷ்ணன் 1999ம் ஆண்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார். 2014ம் ஆம் ஆண்டு தனித்து களமிறங்கி வெற்றிபெற்றார். 

மீண்டும் அந்தத் தொகுதியில் அவரே களமிறங்கி உள்ளார். இதுவரை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக கன்னியாகுமரியில் போட்டியிட்டு வென்றதே இல்லை. இந்தக் கவலை பொன் ராதாகிருஷ்ணனை வாட்டி வதைத்து வருகிறது. உள்ளுக்குள் அவருக்கு உதறல் எடுத்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து வந்தார் பொன்னார்.

அங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வசந்தகுமார் பணத்தை தண்ணீராக செலவளித்து வருகிறார். அத்தோடு அந்தத் தொகுதியில் செல்வாக்கும் இருப்பதால் வசந்தகுமார் வெற்றிபெறுவது உறுதியாகி இருக்கிறது. இதனால் பொன்னாருக்குள் இருந்து வந்த நடுக்கம் வெளிப்படத் தொடங்கி உள்ளது. அதையும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வெளிப்படுத்தி விட்டார். 

கனியாகுமரியில் பாஜக வேட்பாளரான பொன்னாரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய பொன்னார், ’கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக- பாஜ கூட்டணி வெற்றி பெற்றதில்லை என்ற நிலை உள்ளது. இந்த முறை அந்த வரலாற்றை மற்றி அமைக்க வேண்டும்’’ என கூறி வெளிப்படையாக அதிமுகவினரை தூண்டியுள்ளார். 
 

click me!