டி.டி.வி அணி வெல்லப்போகும் 3- எம்.பி ; 4 -எம்.எல்.ஏ-க்கள்... எந்தெந்த தொகுதிகள் தெரியுமா..?

Published : Apr 04, 2019, 03:32 PM IST
டி.டி.வி அணி வெல்லப்போகும் 3- எம்.பி ;  4 -எம்.எல்.ஏ-க்கள்... எந்தெந்த தொகுதிகள் தெரியுமா..?

சுருக்கம்

திமுகவும், அதிமுகவும் மாபெரும் கூட்டணியை அமைத்து போட்டியிட்டாலும் தனித்து களமிறங்கும் அமமுக மக்களவையில் 3 தொகுதிகளிலும், இடைத்தேர்தலில் 4 தொகுதிகளிலும் வெற்றிபெறப்போவது உறுதியாகி இருக்கிறது.

திமுகவும், அதிமுகவும் மாபெரும் கூட்டணியை அமைத்து போட்டியிட்டாலும் தனித்து களமிறங்கும் அமமுக மக்களவையில் 3 தொகுதிகளிலும், இடைத்தேர்தலில் 4 தொகுதிகளிலும் வெற்றிபெறப்போவது உறுதியாகி இருக்கிறது.

திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு, கல்லூரி, நெருக்கமானவர்களுக்கு சொந்தமானவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைக்கு பிறகு மத்திய உளவுத்துறை எடுத்துள்ள ரகசிய சர்வே முடிவில் திமுக 18 மக்களவை தொகுதிகளிலும், அதிமுக 13 தொகுதிகளிலும் மூன்று தொகுதிகளில் அமமுகவும் வெற்றிபெறும் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. 

மீதமுள்ள 5 தொகுதிகளில் இழுபறி நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக, அந்த ஐந்து தொகுதிகளில் நீடிக்கும் இழுபறியில் அமமுகவும் லிஸ்டில் இருக்கிறது. அதன்படி, தஞ்சாவூர், தேனி, மதுரை ஆகிய மூன்று தொகுதிகளில் வெற்றி உறுதி எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

18 சட்டமன்ற திமுக 9 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும், அமமுக 4 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என மத்திய உளவுத்துறை கணித்துள்ளது. அதன்படி திருவாரூர், மானாமதுரை, பெரியகுளம், ஆண்டிப்பட்டி ஆகிய நான்கு தொகுதிகள் அமமுக வெற்றிபெறுவது உறுதியாகி இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..