
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக தங்கபாலுவை நியமனம் செய்துள்ளது கட்சி மேலிடம்.
இவர் ஏற்கனவே தமிழகத்தில் ராகுல் காந்தி மேற்கொண்ட பிரச்சார உரையினை தமிழில் மொழிபெயர்த்திருந்தார். அப்போது ராகுல்காந்தியின் உரையை சில மாறுபட்ட பொருளுடன் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது குறித்து சமூகவலைதளங்களில் இதுகுறித்த வீடியோ பரவலாக பார்க்க முடிந்தது.
இந்நிலையில் ராகுல் போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராக தங்கபாலுவை நியமனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தியை பொறுத்தவரையில் இரண்டு இடங்களில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார் அதில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு தொகுதி.
இதனை தொடர்ந்து, வயநாடு தொகுதியில் போட்டியிட இன்று மனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. நேற்று இரவு கேரளா வந்த ராகுல் இன்று காலை தனி ஹெலிகாப்டர் மூலம் வயநாடு வந்து கல்பாத்தியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் அவருடைய சகோதரி பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொழிபெயர்ப்புக்கு மட்டுமில்லாமல் தற்போது தேர்தல் பொறுப்பாளருமாகவும் தங்கபாலுவை நியமனம் செய்துள்ளதால்,ராகுல் காந்திக்கு தங்கபாலு அதிர்ஷ்டக்காரரோ என காங்கிரஸ் தொண்டர்களிடையே பேசப்பட்டு,ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.