#BREAKING அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்.. அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்..!

Published : Aug 05, 2021, 04:26 PM ISTUpdated : Aug 05, 2021, 04:37 PM IST
#BREAKING அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்.. அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்..!

சுருக்கம்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். இவரது மறைவு தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். இவரது மறைவு தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வயது மூப்பின் காரணமாகவும், உடல்நிலை பாதிப்பு காரணமாகவும் தீவிர அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி அவரது இல்லத்தில் ஓய்வில் இருந்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வென்டிலேட்டர் உதவியுடன் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

இந்நிலையில், கொரோனாவில் மீண்டு ஓய்வில் இருந்து வந்த அதிமுக அவைத்ததலைவர் மதுசூதனனுக்கு கடந்த மாதம் 20ம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடனும் அவருக்குச் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் ஆபத்தான கட்டத்தில் இருந்து மெல்ல அவர் மீண்டதாக கூறப்பட்டது. அப்படி இருந்த போதிலும்  வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து மருத்துவமனையிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், நேற்று இரவு முதல் அவரது  உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்பட்டது. 

இந்நிலையில், உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மசூதனன் 3.42 மணியளவில் உயிரிழந்தார். இவரது மறைவு கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!