தங்க தலைவனா இருங்க... ஹாலிவுட் ஸ்டாரா இருங்க... லண்டன் தாதாவா இருங்க... #வரிகட்டுங்க_தனுஷ் ..!

By Thiraviaraj RMFirst Published Aug 5, 2021, 4:12 PM IST
Highlights

சிம்பு ரசிகர்கள்  #வரிகட்டுங்க_தனுஷ்  என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி பலரும் தனுஷுக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
 

தங்க தலைவனா இருந்ங்க... ஹாலிவுட் ஸ்டாரா இருங்க... லண்டன் தாதாவா இருங்க... #வரிகட்டுங்க_தனுஷ் என்கிற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் தனுஷ் கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட ரூ.60.66 லட்சம் நுழைவு வரியை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நடிகர் விஜய் வழக்கை விசாரித்த அதே நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தனுஷுக்கு கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி கேட்டது. ’மக்கள் வரி பணத்தில் போடப்பட்ட சாலையில்தான் காரை ஓட்ட போகிறீர்கள், வெளி நாட்டில் இருந்து கார் வாங்கியதற்காக வானிலா பறக்க முடியும் என்றார். வாங்கும் சோப் பில் கூட தினக்கூலி தொழிலாளர்கள் வரி கட்டுகிறார்கள் என்றும், அவர்கள் வரி விலக்கு கேட்டு வழக்கு போடுகிறார்களா? எனவும் நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.

D ~ ஐயோ அண்ணா என்ன உட்ருனா pic.twitter.com/8vma7857E9

— Simbu Forever (@SimbuForever)

 


பின்னர், மீதி வரித்தொகையை செலுத்த தயாராக இருப்பதாக, நடிகர் தனுஷ் தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்ட நிலையில், எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பது குறித்த விவரங்களை வணிக வரித்துறையினர் இன்று மதியம் 2.15 மணிக்குள் தாக்கல் செய்ய நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் உத்தரவிட்டார். அதன்படி நீதிமன்றத்தில் வணிகவரித் துறையினர் விவரங்களை தாக்கல் செய்தனர்.

Stop asking Tax from Hollywood actor pic.twitter.com/6Q6mrjnXlD

— Introvert (@raajstr686)

 

பின்னர், 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாய் பாக்கி நுழைவு வரியை 48 மணி நேரத்தில் நடிகர் தனுஷ் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதனையடுத்து சிம்பு ரசிகர்கள்  #வரிகட்டுங்க_தனுஷ்  என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி பலரும் தனுஷுக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

😂😂 https://t.co/ILiHJH3Zbx pic.twitter.com/vEFIf7QxdZ

— பத்துதல ராவணன் (@RickerChitti)

 

click me!