ஒற்றை தலைமை வேண்டாம்.. இரட்டை தலைமை ஓகே.! அதிர்ச்சி கொடுத்த வெல்லமண்டி நடராஜன்

By Raghupati RFirst Published Jun 18, 2022, 10:45 PM IST
Highlights

AIADMK : மாநில முழுவதும் ஆங்காங்கே ஓபிஎஸ்,  இபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக தலைமை ஏற்க வருமாறு போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். பன்னீர் செல்வமோ, ஒற்றை தலைமைக்கு எதிராக தொடர்ந்து பேசிவருகிறார். 

அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதுகுறித்து விவாதிக்க  கடந்த 14ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒன்றை  தலைமை வேண்டும் என சிலர் கருத்து கூறி சர்ச்சையை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று 5வது நாளாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. எடப்பாடி பழனிசாமியியும்,  ஓ பன்னீர்செல்வம் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி  வருகின்றனர். 

அதேபோல் மாநில முழுவதும் ஆங்காங்கே ஓபிஎஸ்,  இபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக தலைமை ஏற்க வருமாறு போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். பன்னீர் செல்வமோ, ஒற்றை தலைமைக்கு எதிராக தொடர்ந்து பேசிவருகிறார். பொதுச்செயலாளர் என்றால் அது ஜெயலலிதா மட்டும் தான் வேறு யாரேனும் பொதுச்செயலாளர் பதவிக்கு வந்தால்,  அது ஜெயலலிதாவுக்கான மரியாதை கட்சியில் காலாவதியானதற்கு அர்த்தம் என்று தனது கருத்துக்களை முன்வைத்தார். தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க : AIADMK : அதிமுகவில் திருத்தங்கள் செய்ய கூடாது.. நீதிமன்றத்திற்கு பறந்த மனு.. குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள் !

இன்று இரவு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், அவருடன் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ,வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமச்சந்திரன், அதிமுக தற்காலிக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

அப்போது பேசிய அவர், ‘ஒற்றை தலைமை குறித்து பேச தயார் என்று தற்போது வரை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்ததை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு ஆட்சியை சிறப்பாக நடத்தி வந்த பெருமை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்யை சாரும். திடீரென்று ஒற்றே தலைமை தான் வேண்டும் என்று எடப்பாடியை  பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள்.

இரட்டை தலைமை தான் வேண்டும் என்று தன்னுடைய நிலைப்பாட்டை ஓபிஎஸ் சொல்லிவிட்டார். அதிமுகவில் உள்ள முக்கிய பிரபலங்கள் சிலர் ஒற்றை தலைமை வேண்டும் என்றும், சிலர் இரட்டை தலைமையே இருக்கட்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். ஒற்றை தலைமை தேவையில்லை. இரட்டை தலைமையே இருக்கட்டும். நான் இரண்டு பேருக்குமே ஆதரவு தெரிவிப்பேன்’ என்று கூறினார்.

இதையும் படிங்க : AIADMK : எடப்பாடிக்கு பதவியை விட்டு கொடுங்க ஓபிஎஸ்.. இதான் நியாயம் - ராஜன் செல்லப்பா அதிரடி

click me!