அதிமுக சார்பில் நாளை மதுரையில் வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு என்ற பெயரில் மதுரையில் மாநாடு நடைபெற உள்ளது.
அதிமுக மாநாடு வெற்றியடைய வேண்டும் என பழனியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
அதிமுக சார்பில் நாளை மதுரையில் வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு என்ற பெயரில் மதுரையில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு வெற்றியை பெற வேண்டும் எனவும் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக ஆக வேண்டும் என பழனி அதிமுக நகர கழகம் மற்றும் 28வது வார்டு சார்பில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மாரியம்மன் கோவிலில் அபிஷேகம் செய்தனர்.
இதையும் படிங்க;- இது மக்களிடம் துளியும் நம்பிக்கை பெறாது! அண்ணாவின் பொன்மொழியோடு பொருந்தும் துரோகிகளின் மாநாடு! டிடிவி. தினகரன்
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் முருகானந்தம், தலைமையில் நகர இணை செயலாளர் அகிலாண்டம் சரவணன் ஏற்பாட்டில், முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க;- நீதிமன்றம் சொன்னதால தான் நாங்க ஏத்துக்கணும்.. இபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்..!