நானும் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து இனி வரும் காலங்களில் அரசியலில் பயணிப்போம். பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கும் பட்சத்தில் அந்த கூட்டணியில் அமமுக இணையுமா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம்.
பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கும் பட்சத்தில் அந்த கூட்டணியில் அமமுக இணையுமா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் ;- நானும் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து இனி வரும் காலங்களில் அரசியலில் பயணிப்போம். பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கும் பட்சத்தில் அந்த கூட்டணியில் அமமுக இணையுமா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம்.
இதையும் படிங்க;- துட்சாதன நாடகத்தை அரங்கேற்றிய மூத்த அமைச்சர்! சாட்சிகளை தன்னுடன் வைத்துக்கொண்டு பொய் பேசலாமா? டிடிவி. கேள்வி.!
கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது ஈட்டிய பணத்தில் இருந்து 250 கோடியை மக்களுக்கு வழங்கி அள்ளி செல்லலாம் என நினைக்கிறார்கள். அதிமுக மாநாட்டிற்கு மக்கள் செல்வார்களா என்று தெரியாது. அனைத்து பகுதிகளிலிருந்து ஒரு ஆளுக்கு ரூ.1000 கொடுத்து மதுரை அதிமுக மாநாடுக்கு அழைத்து செல்கின்றனர். எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கபளீகரம் செய்துவிட்டார். அதிமுகவை ஜனநாயக ரீதியில் நிச்சயம் மீட்டெடுப்போம். அமமுக சார்பிலும் மாநாடு நடத்தப்படும்.
இதையும் படிங்க;- அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையே போச்சு! ஓட்டேரி காவலரின் கதறல் நெஞ்சை உறைய வைக்கிறது! டிடிவி.தினகரன்.!
அதிமுக பொதுச்செயலாளர் என்று நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு நிலுவையில் உள்ளது. ஆகையால், அவர் எங்களுடன் இணைந்து பயணிப்பது இயலாத காரியம். 2026ம் சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.